பூடானின் நான்காம் மன்னர், பிரதமரை வரவேற்றார், உலகளாவிய அமைதிப் பிரார்த்தனை திருவிழாவில் பிரதமர் பங்கேற்றார்
November 12th, 09:54 am
பூடானின் திம்புவில் நான்காம் மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சுக் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று வரவேற்றார். 4-ம் மன்னரின் 70-வது பிறந்த தினத்தையொட்டி, அவரது சிறந்த உடல் ஆரோக்கியம் மற்றும் நலனுக்காக இந்திய அரசு மற்றும் மக்களின் வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். இந்தியா – பூடான் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் தலைமைத்துவம், ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக 4-ம் மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் குறித்தும், பரஸ்பரம் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பகிரப்பட்ட ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்புகள் இருநாட்டு மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்போது அவர்கள் குறிப்பிட்டனர்.His Majesty The Fourth King of Bhutan has played a pivotal role in strengthening India and Bhutan friendship: PM Modi in Thimphu
November 11th, 12:00 pm
In his address at the Changlimethang Celebration Ground in Thimphu, Bhutan, PM Modi reaffirmed that those behind the recent Delhi blast will not be spared. He lauded His Majesty The King for leading Bhutan to new heights, highlighting his pivotal role in strengthening India and Bhutan friendship. The PM also inaugurated a hydroelectric project and recalled India’s support package of ₹10,000 crore announced last year for Bhutan’s Five-Year Plan.பூடானின் 4-வது மன்னரது 70-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 11th, 11:39 am
உலகம் ஒரு குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது என்றும், அனைவரும் இன்புற்றிருக்க நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலக மகிழ்ச்சியை வலியுறுத்துவதாக பிரதமர் கூறினார். சொர்க்கத்திலும், விண்வெளியிலும், பூமியிலும், நீர், தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் அமைதியை விரும்பும் வேத மந்திரங்கள் இவற்றை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உணர்வுகளுடன் பூடானின் உலகளாவிய அமைதி வழிபாட்டுத் திருவிழாவில் இந்தியா பங்கேற்கிறது என்று அவர் குறிப்பிட்டார். உலகம் முழுவதிலும் இருந்து உலகளாவிய அமைதிக்காக வழிபாடு செய்ய துறவிகள் வந்துள்ள நிலையில், இந்த கூட்டான உணர்வின் பகுதியாக இந்தியாவின் 140 கோடி மக்களும் உள்ளனர் என்று பிரதமர் கூறினார்.பிரதமர் பூடான் சென்றடைந்தார்
March 22nd, 09:53 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.