பூடானில், பிரதமரின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை
November 12th, 10:00 am
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பூடானில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது 2025 நவம்பர் 11 அன்று சாங்லிமிதாங்கில் நடைபெற்ற 4-ம் மன்னரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். திம்புவில் நடைபெற்ற உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவிலும் அவர் கலந்து கொண்டார். இத்திருவிழாவின் போது பொதுமக்களின் வழிபாட்டுக்காக திம்புவில், இந்தியாவிலிருந்து பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதற்காக பூடான் மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.பூட்டான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
November 11th, 06:14 pm
இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருங்கிய உறவுகளை வடிவமைப்பதில் அடுத்தடுத்து வந்த மன்னர்கள் முன்வைத்த வழிகாட்டும் தொலைநோக்குப் பார்வைக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். பூட்டானின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்த விலைமதிப்பற்ற ஆதரவிற்கு மன்னர் நன்றி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்
November 09th, 09:59 am
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி 2025 நவம்பர் 11-12 வரை பூட்டானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் பூட்டான் மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சக் மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோரைச் சந்திப்பார். பூட்டானின் நான்காவது மன்னர் மாட்சிமை தங்கிய ஜிக்மே சிங்யே வாங்சக்கின் 70வது பிறந்தநாள் விழாவிலும், உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவிலும் பிரதமர் கலந்து கொள்வார்.புதுதில்லியில் நடைபெற்ற சோல் தலைமைத்துவ மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 21st, 11:30 am
பூடான் பிரதமர் எனது சகோதரர் டாஷோ ஷெரிங் டோப்கே அவர்களே, சோல் நிறுவன வாரியத் தலைவர் சுதிர் மேத்தா அவர்களே, துணைத் தலைவர் ஹன்ஸ்முக் ஆதியா அவர்களே, தொழில்துறை உலகின் ஜாம்பவான்களே, தங்கள் வாழ்க்கையில், தத்தமது துறைகளில் தலைமைப் பண்பை வழங்குவதில் வெற்றி கண்டவர்களே, இதுபோன்ற பல மகத்தான மனிதர்களை நான் இங்கு காண்கிறேன். இங்கே எனது இளம் சகாக்களையும் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.முதலாவது சோல் (SOUL) தலைமைத்துவ மாநாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 21st, 11:00 am
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சோல் (த ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப்) முதலாவது தலைமைத்துவ மாநாட்டை தொடங்கிவைத்து உரையயாற்றினார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள புகழ்பெற்ற தலைவர்களையும், எதிர்கால இளம் தலைவர்களையும் வரவேற்ற திரு மோடி, இந்த மாநாடு நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் நெருக்கமான நிகழ்வு என்று குறிப்பிட்டார். நாட்டைக் கட்டமைப்பதில் சிறந்த குடிமக்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும், ஒவ்வொரு துறையிலும் சிறந்த தலைமைத்துவ பண்புகளுடன் கூடிய தலைவர்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பயணத்தில் தலைமைத்துவப் பயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்று அவர் எடுத்துரைத்தார். தலைமைத்துவ பயிற்சி வழங்கும் சோல் என்பது பெயரில் மட்டும் அல்ல, இந்தியாவின் சமூக வாழ்வியலில் ஆன்மாவாக திகழும் என்று கூறினார். இந்தப் பயிற்சி நிறுவனம் ஆன்மீக அனுபவத்தின் சாராம்சத்தையும் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பினருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட பிரதமர் திரு மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள கிஃப்ட் நகரில் விரைவில் இந்த சோல் தலைமைத்துவப் பயிற்சிப் பள்ளி வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.பூடான் மன்னரையும் ராணியையும் பிரதமர் வரவேற்றார்
December 05th, 03:42 pm
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக், பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் இன்று (05.12.2024) வரவேற்றார். மன்னருக்கும் ராணிக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், 2024 மார்ச் மாதத்தில் தமது அரசுமுறைப் பயணத்தின்போது பூடான் அரசும், மக்களும் அளித்த அன்பான விருந்தோம்பலை நினைவுகூர்ந்தார்.பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பூட்டான் மன்னர் வாழ்த்து
June 05th, 08:05 pm
மன்னரின் அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பூட்டான் மற்றும் இந்தியா இடையே நிலவும் முன்மாதிரியான நட்புறவை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், பூட்டான் அரசுடன் இணைந்து பணியாற்றவும், தனித்துவமான இருதரப்பு பங்களிப்பை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.பூடான் மன்னருடன் பிரதமர் சந்திப்பு
March 22nd, 06:32 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியெல் வாங்சுக்கை திம்புவில் இன்று சந்தித்தார். பாரோவிலிருந்து திம்பு வரையிலான பயணத்தின் வழியெங்கும் மக்கள் அவருக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்காக மாட்சிமை தங்கிய மன்னருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.பிரதமர் பூடான் சென்றடைந்தார்
March 22nd, 09:53 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று முதல் இரண்டு நாட்கள் (2024 மார்ச் 22 முதல் 23 வரை) பூடானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இதனையொட்டி இன்று அவர் பாரோ சென்றடைந்தார். இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையே வழக்கமான உயர்மட்ட பயணம் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற மத்திய அரசின் நோக்கத்திற்கு ஏற்ப இந்தப் பயணம் அமைந்துள்ளது.பிரதமர் பூடான் பயணம் மேற்கொள்கிறார் (மார்ச் 21-22, 2024)
March 22nd, 08:06 am
இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் சந்திக்க உள்ளார். பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை பிரதமர் சந்தித்தார்
April 04th, 06:00 pm
இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;