அசாம் மாநிலம் குவஹாத்தியில் ஜூமோயிர் பினாந்தினி நிகழ்ச்சியில் (மாபெரும் ஜூமோயிர் நடனம்) பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 24th, 06:40 pm
அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, துடிப்புமிக்க முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அரசின் எனது சகாக்களான டாக்டர் எஸ். ஜெய்சங்கர், சர்பானந்த சோனோவால் அவர்களே, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா அவர்களே, ஏனைய அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்களே, அனைத்து கலைஞர்களே, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளே,அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்ற ஜுமோயிர் பினாந்தினி நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்
February 24th, 06:39 pm
அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று நடைபெற்ற ஜுமோயிர் பினாந்தினி (மெகா ஜுமோயிர்) 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நிகழ்ச்சியில் ஆற்றல், உற்சாகம் மற்றும் எழுச்சி நிறைந்த ஒரு சூழல் இருந்தது என்றார். தேயிலைத் தோட்டங்களின் நறுமணத்தையும் அழகையும் பிரதிபலிக்கும் ஜுமோயிர் கலைஞர்களின் ஈர்க்கக்கூடிய தயாரிப்புகளையும் அவர் குறிப்பிட்டார். ஜுமார் மற்றும் தேயிலைத் தோட்ட கலாச்சாரத்துடன் மக்களுக்கு ஒரு சிறப்பு பிணைப்பு இருப்பதைப் போலவே, தானும் அதேபோன்ற தொடர்பைப் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார். இன்று ஜுமார் நடனத்தை நிகழ்த்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான கலைஞர்கள் ஒரு சாதனையை நிகழ்த்துவார்க என்று அவர் மேலும் கூறினார். 2023-ஆம் ஆண்டில் அசாம் சென்றபோது, 11,000 கலைஞர்கள் பிஹு நடனத்தை நிகழ்த்தி சாதனை படைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், அது தனக்கு மறக்க முடியாத நினைவாக இருந்தது என்றும், இதேபோன்ற கண்கவர் நிகழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக அசாம் அரசுக்கும், அதன் முதல்வருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். தேயிலை சமூகத்தினரும், பழங்குடியின மக்களும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதால் அசாமுக்கு இன்று பெருமை சேர்க்கும் நாள் என்று அவர் குறிப்பிட்டார். இந்த சிறப்பு நாளில் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.