சவுதி அரேபியா மதினா சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் இரங்கல்

November 17th, 12:34 pm

சவூதி அரேபியாவின் மதினா நகரில் நேரிட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியல்

April 23rd, 02:25 am

இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

உலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் பிரதமரைச் சந்தித்தார்

April 23rd, 02:23 am

முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல் இசா இன்று ஜெட்டாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார். ஜம்மு-காஷ்மீரில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்

April 23rd, 02:20 am

பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.

பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வருகிறார்

April 22nd, 04:29 pm

அரச மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வந்தார். சிறப்பு மரியாதையாக, சவுதி வான்வெளியில் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்தை சவுதி விமானப்படை ஜெட் விமானங்கள் அழைத்துச் சென்று, ஜெட்டாவிற்கு அழைத்துச் சென்றன. பிரதமர் மோடிக்கு ஜெட்டாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.

சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை

April 22nd, 08:30 am

பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறேன்.

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது!

June 21st, 03:04 pm

உலகம் முழுவதும் நான்காம் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. யோகா பயிற்சி முகாம்கள், அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் உலகம் முழுவதும் பெருமளவில் யோகாவை அடைய உதவியது மற்றும் தினசரியாக யோகாவின் பலன்களை பெறுவதற்கும் மக்களுக்கு யோகா கல்வியை அளிக்கவும் யோகா தினம் உதவியது.

India was earlier “one of the countries” in the world but now it is a “very important country”: PM Modi

April 02nd, 08:59 pm



PM visits L&T workers' residential complex in Riyadh

April 02nd, 08:58 pm