சில்வசாவில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
March 07th, 03:00 pm
நீங்கள் அனைவரும் ரும் நலமாக இருக்கிறீர்களா? இன்று இங்கு மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு இங்கு வரும் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளீர்கள். யூனியன் பிரதேசத்தின் அனைத்து தொழிலாளர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். பல பழைய நண்பர்களுக்கும் வணக்கம் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.பிரதமர் திரு நரேந்திர மோடி, தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம் சில்வாசாவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தார்
March 07th, 02:45 pm
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் ரூ.2580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சில்வாசாவில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக சில்வாசாவில் நமோ மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தப் பிராந்தியத்துடன் தொடர்பு கொள்ள, வாய்ப்பளித்த தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுள்ள தொழிலாளர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார். மக்களுடன் அவர் கொண்டிருந்த அரவணைப்பு மற்றும் நீண்டகாலத் தொடர்பை சுட்டிக் காட்டிய அவர், பிராந்தியத்துடனான தமது பிணைப்பு பல தசாப்தங்கள் பழமையானது என்று பகிர்ந்து கொண்டார். 2014-ல் தமது அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் எடுத்துரைத்தார்.மக்கள் மருந்தக தினத்தை முன்னிட்டு குறைந்த செலவில் மருந்துகள் கிடைப்பதற்கான அர்ப்பணிப்பைப் பிரதமர் மீண்டும் உறுதி செய்தார்
March 07th, 12:20 pm
மக்கள் மருந்தக தினத்தையொட்டி, அனைத்து மக்களுக்கும் உயர்தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதிலும், ஆரோக்கியமான மற்றும் உடல்திறன் இந்தியாவை உறுதி செய்வதிலும் அரசின் அர்ப்பணிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.