ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ராவில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 04th, 12:50 pm
இந்தக் கடும் வெயிலிலும், இத்தனை இடங்களில் இவ்வளவு பிரம்மாண்டமான முறையில் நீங்கள் கூடியிருந்து எங்களுக்கு ஆசி வழங்குவது, பி.ஜே.பி. அரசாங்கத்தின் முயற்சிகளின் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. ராஜஸ்தான் மண்ணின் இந்த ஆதரவுக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தானின் பலோத்ரா மாவட்டத்தில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
July 04th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.07.2026) ராஜஸ்தானின் பலோத்ராவில் சுமார் ₹1.06 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டதற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், இந்த மாபெரும் மக்கள் திரளை தற்போதைய ஆட்சிக்குக் கிடைத்த ஒரு மகத்தான அங்கீகாரம் என்று குறிப்பிட்டார். அரசின் முயற்சிகளின் மீது வைத்துள்ள உயர்ந்த நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டும் இந்த மகத்தான ஆதரவிற்காக, ராஜஸ்தான் மண்ணிற்கு முற்றிலும் கடமைப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார்.‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மேற்கு ஆசிய நெருக்கடியைச் சமாளிக்க 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையின் மீது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
March 29th, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேற்கு ஆசிய மோதல் குறித்துப் பேசியதோடு, இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வதந்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், அரசாங்கம் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஞான பாரதம் கணக்கெடுப்பு, விளையாட்டு மற்றும் உடற்தகுதி, நீர் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சூரிய சக்தி போன்ற முக்கியத் தலைப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 01:00 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.பிரதமர் திரு நரேந்திர மோடி 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' முன்முயற்சியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
September 06th, 12:30 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். இந்தத் திட்டத்தின் கீழ், மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தவும், நீண்டகால நீர் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் சுமார் 24,800 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.'நீர் சேமிப்பு மக்கள் பங்கேற்பு 'திட்டத்தை செப்டம்பர் 6 அன்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
September 05th, 02:17 pm
குஜராத் மாநிலம் சூரத்தில் 2024, செப்டம்பர் 6 அன்று மதியம் 12:30 மணிக்கு காணொலி காட்சி மூலம் ‘நீர் சேகரிப்பு மக்கள் பங்கேற்பு முன்முயற்சி' தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.