Gujarat’s biggest strength is that it has kept development moving continuously for the past 25 years: PM Modi in Vav-Tharad

March 31st, 05:00 pm

PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.

PM Modi lays foundation stone, inaugurates, and dedicates to the Nation development projects worth more than ₹20,000 crore in Vav-Tharad,Gujarat

March 31st, 04:32 pm

PM Modi launched and dedicated multiple development projects in Vav-Tharad, Gujarat, worth nearly ₹20,000 crore. Addressing a large gathering, he highlighted initiatives across roads, railways, power, water supply, urban development, healthcare and tourism aimed at boosting connectivity, improving public services and accelerating socio-economic growth in the region while strengthening the vision of a Viksit Bharat.

Prime Minister shares Sanskrit Subhashitam, says there is wonderful inspiration in the messages of Lord Mahavira

March 31st, 10:41 am

On the sacred occasion of Bhagwan Mahavir Janma Kalyanak, PM Modi said that there is great inspiration in the messages of Bhagwan Mahavir, based on truth, harmony, good conduct, and equality. He added that these great thoughts will forever remain the guiding path for humanity.

Samrat Samprati Museum is the heritage of millions of people in India, heritage of India's glorious past: PM Modi in Gandhinagar, Gujarat

March 31st, 10:25 am

PM Modi inaugurated the Samrat Samprati Sangrahalay, Jain Heritage Museum at Koba Tirth in Gandhinagar, Gujarat, on the auspicious occasion of Bhagwan Mahavir Janma Kalyanak. Speaking on the occasion, the PM said the Sangrahalay belongs to the crores of people of India and stands as a testament to our glorious past. Lauding the ahimsa philosophy of Samrat Samprati, he called on people to rise above personal aspirations and work for the nation.

PM Modi inaugurates Samrat Samprati Museum at Koba Tirth in Gandhinagar On the occasion of Mahavir Jayanti

March 31st, 10:15 am

PM Modi inaugurated the Samrat Samprati Sangrahalay, Jain Heritage Museum at Koba Tirth in Gandhinagar, Gujarat, on the auspicious occasion of Bhagwan Mahavir Janma Kalyanak. Speaking on the occasion, the PM said the Sangrahalay belongs to the crores of people of India and stands as a testament to our glorious past. Lauding the ahimsa philosophy of Samrat Samprati, he called on people to rise above personal aspirations and work for the nation.

Prime Minister Narendra Modi to inaugurate Samrat Samprati Museum and Kaynes Semicon Plant in Gujarat

March 30th, 11:05 am

PM Modi will visit Gujarat on 31st March 2026. He will inaugurate the Samrat Samprati Museum in Gandhinagar, showcasing the rich historical, cultural and spiritual legacy of Jainism. In a major step under the India Semiconductor Mission (ISM), the PM will inaugurate the Kaynes Semicon Plant at Sanand, Ahmedabad and will also visit Vav-Tharad to launch multiple development projects worth more than ₹20,000 crore.

‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மேற்கு ஆசிய நெருக்கடியைச் சமாளிக்க 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையின் மீது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

March 29th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேற்கு ஆசிய மோதல் குறித்துப் பேசியதோடு, இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வதந்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், அரசாங்கம் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஞான பாரதம் கணக்கெடுப்பு, விளையாட்டு மற்றும் உடற்தகுதி, நீர் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சூரிய சக்தி போன்ற முக்கியத் தலைப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகாராஜின் 500-வது புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய காணொலி உரையின் தமிழாக்கம்

January 11th, 01:00 pm

இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், எங்கள் உத்வேகத்தின் ஆதாரமான மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை நான் முதலில் வணங்குகிறேன். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

January 11th, 12:44 pm

ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை இன்று காணொலிக் காட்சி மூலம் வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இந்த புனிதமான தருணத்தில் முதலில் மதிப்பிற்குரிய புவன்பானு சூரிஷ்வர் ஜி மகராஜை வணங்கி மரியாதை செலுத்துவதாக குறிப்பிட்டார்.

India’s manuscripts contain the footprints of the development journey of all humanity: PM Modi

September 12th, 04:54 pm

In his address at the International Conference on Gyan Bharatam, PM Modi emphasised that the Gyan Bharatam Mission is set to become a proclamation of India’s culture, literature, and consciousness. He remarked that India’s knowledge tradition stands on four foundational pillars — Preservation, Innovation, Addition, and Adaptation. He appealed to the country’s youth to actively participate in the mission, stressing the importance of exploring the past through technology.

புதுதில்லியில் நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்

September 12th, 04:45 pm

புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் பொற்காலத்தின் மறுமலர்ச்சியை விஞ்ஞான் பவன் இன்று கண்டு களிப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் ஞான பாரதம் இயக்கம் பற்றிய அறிவிப்பை தாம் வெளியிட்டதாகவும், மிகக் குறுகிய காலத்திலேயே ஞான பாரதம் சர்வதேச மாநாடு நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய வலைத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக திரு மோடி கூறினார். இது ஒரு அரசு சார்ந்த அல்லது கல்வி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்று கூறிய பிரதமர், இந்தியாவின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் உணர்வுகளின் குரலாக ஞான பாரதம் இயக்கம் விளங்கும் என்று தெரிவித்தார். ஆயிரக்கணக்கான தலைமுறைகளின் சிந்தனை மரபுகளை அவர் பிரதிபலித்தார். இந்தியாவின் ஞானம், பாரம்பரியம் மற்றும் அறிவியல் கலாச்சாரங்களை அடிக்கோடிட்டு காட்டி, நாட்டின் தலைசிறந்த முனிவர்கள், துறவிகள் மற்றும் அறிஞர்களின் ஞானம் மற்றும் ஆராய்ச்சியை அவர் பாராட்டினார். ஞான பாரதம் இயக்கத்தின் வாயிலாக இது போன்ற மரபுகள் டிஜிட்டல்மயமாக்கப்படுவதாக திரு மோடி குறிப்பிட்டார். இந்த இயக்கத்திற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்துக் கொண்டதுடன் ஞான பாரதம் குழுவிற்கும், கலாச்சார அமைச்சகத்திற்கும் பாராட்டு தெரிவித்தார்.

மன்னிப்பு, இரக்கம் மற்றும் பணிவுக்கான அழைப்பு விடுக்கும் சம்வத்சரி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

August 27th, 06:20 pm

புனிதமான சம்வத்சரி பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அனைத்துக் குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மன்னிப்பு, இரக்கம், நேர்மையான மனிதத் தொடர்பு ஆகிய காலத்தால் அழியாத மாண்புகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஆச்சார்யா ஸ்ரீ வித்யானந்த் ஜி மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 11:15 am

பரம் ஷ்ரத்தேய ஆச்சார்யா ஸ்ரீ பிரக்யா சாகர் மகாராஜ் ஜி அவர்களே, ஷ்ரவணபெலகோலா சுவாமி சாருகீர்த்தி ஜியின் தலைவர் அவர்களே, என் சக நண்பர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, என் சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு நவீன் ஜெயின் அவர்களே, பகவான் மகாவீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளையின் தலைவர் திரு பிரியங்க் ஜெயின் அவர்களே, செயலாளர் திருமிகு மம்தா ஜெயின் அவர்களே, அறங்காவலர் திரு பியூஷ் ஜெயின் அவர்களேஇதர பிரமுகர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, தாய்மார்களே, ஜெய் ஜினேந்திரா!

ஆச்சார்ய வித்யானந்த் மகாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

June 28th, 11:01 am

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று (28.06.2025) நடைபெற்ற ஆச்சார்யா வித்யானந்த் மஹாராஜின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தில் ஒரு முக்கியமான நிகழ்வை நாடு காண்கிறது என்றும், ஆச்சார்யா வித்யானந்த் முனிராஜின் நூற்றாண்டு விழாவின் புனிதத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். மதிப்பிற்குரிய ஆச்சார்யாவின் அழியாத உத்வேகத்தால் நிறைந்த இந்த நிகழ்வு, ஒரு அசாதாரணமான மற்றும் எழுச்சியூட்டும் சூழலை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார். அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நாளை (ஜூன் 28) புதுதில்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

June 27th, 05:06 pm

ஆச்சாரிய வித்யானந்த் மகராஜ் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நாளை (ஜூன் 28) காலை 11 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

மகாவீர் பிறந்தநாளில் பகவான் மகாவீரரின் சிந்தனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்

April 10th, 03:30 pm

மகாவீர் பிறந்த நாளை முன்னிட்டு பகவான் மகாவீரரின் காலத்தால் அழியாத போதனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமது சொந்த வாழ்க்கையில் அவரது போதனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பகவான் மகாவீரருக்கு பிரதமர் மரியாதை

April 10th, 08:44 am

மகாவீர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகவான் மகாவீரருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பகவான் மகாவீரர் எப்போதும் அகிம்சை, உண்மை, கருணை ஆகியவற்றை வலியுறுத்தி வந்தவர் என்றும், அவரது கொள்கைகள் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மக்களுக்கு வலிமையை அளிக்கின்றன என்றும் திரு மோடி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு செம்மொழி அந்தஸ்தை அரசு வழங்கியதாகவும், அந்த முடிவு பலரது பாராட்டைப் பெற்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நவ்கார் மகாமந்திர தினத் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

April 09th, 08:15 am

மனம் சாந்தி பெற்றது, மனம் நிலைபெற்றது, அமைதி மட்டுமே, ஒரு அற்புதமான உணர்வு, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது. நவ்கார் மகாமந்திரம் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நவ்கார் மஹாமந்திரத்தின் ஆன்மீக சக்தியை நான் இன்னும் எனக்குள் உணர்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரில் இதேபோன்ற வெகுஜன மந்திர உச்சாடனத்தை நான் பார்த்தேன். இன்று அதே உணர்வு, அதே ஆழத்துடன் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான புண்ணிய ஆத்மாக்கள் ஒரே உணர்வோடு, வார்த்தைகள் ஒன்றாகப் பேசப்பட்டு, ஒன்றாக எழுப்பப்பட்ட சக்தி உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாத நிகழ்வாகும்.

நவ்கார் மகாமந்திர தினத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

April 09th, 07:47 am

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நவ்கார் மகாமந்திர தினத்தைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நவ்கார் மந்திரத்தின் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை எடுத்துரைத்து, மனதில் அமைதியையும் நிலைத்தன்மையையும் கொண்டுவரும் அதன் திறனை எடுத்துரைத்தார். வார்த்தைகள், எண்ணங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஆழ்மனதிலும் பிரக்ஞையிலும் ஆழமாக எதிரொலிக்கும் அசாதாரண அமைதி உணர்வு குறித்து அவர் குறிப்பிட்டார். நவ்கார் மந்திரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, அதன் புனித ஸ்லோகங்களைக் கூறியதுடன், இந்த மந்திரம் ஒன்றுபட்ட ஆற்றல், நிலைத்தன்மை, சமநிலை, சிறந்த உணர்வு, உள் ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது என்று விவரித்தார். தமது சொந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், நவ்கார் மந்திரத்தின் ஆன்மீக சக்தியை அவர் எவ்வாறு தொடர்ந்து உணர்கிறார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இதேபோன்ற கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் தான் பங்கேற்று இருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். அது அவர் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள லட்சக்கணக்கான நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் ஒன்றுபட்ட உணர்வுடன் ஒன்றிணைந்த இணையற்ற அனுபவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். கூட்டு ஆற்றல், ஒருங்கிணைந்த சொற்கள் ஆகியவை குறித்தும் அவர் குறிப்பிட்டார். இது உண்மையிலேயே அசாதாரணமானது எனவும் ஈடு இணையில்லாதது என்றும் அவர் விவரித்தார்.

புதுதில்லியில் ஏப்ரல் 9 அன்று நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

April 07th, 05:23 pm

புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஏப்ரல் 9 அன்று காலை 8 மணியளவில் நவ்கார் மகாமந்திர தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.