இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 24th, 10:05 pm

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். படைவீரர்கள், நாட்டிற்கு ஆற்றும் உன்னதமான சேவையைக் குறிப்பிட்ட பிரதமர், வீரர்களின் துணிச்சல், ஒழுக்கம் மற்றும் கடமையில் அவர்களது திடமான உறுதிப்பாட்டைப் பாராட்டினார். சேவை மற்றும் மனிதாபிமானத்தின் சீரிய பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையில், பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளின் போது வீரர்களின் கனிவு மற்றும் தயார் நிலையையும் பிரதமர் பாராட்டினார்.

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 24th, 10:41 am

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் உதய தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையின் வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையை வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளம் என்றும் பாராட்டியுள்ளார். இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இது மக்களிடையே மிகுந்த பெருமையை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.