Joint Statement on the visit of PM Modi to the Hashemite Kingdom of Jordan
December 16th, 03:56 pm
At the invitation of HM King Abdullah II, PM Modi visited Jordan on December 15-16, 2025. Both the leaders positively assessed the multi-faceted India-Jordan relations that span across various areas of cooperation including political, economic, defence, security, culture and education among others. They also appreciated the excellent cooperation between the two sides at the bilateral level and in multilateral forums.இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி, பிரதமருடன் சந்திப்பு
December 10th, 10:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இத்தாலியின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அன்டோனியோ தஜானி சந்தித்துப் பேசினார்.ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
November 23rd, 09:44 pm
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமிகு ஜார்ஜியோ மெலோனி-ஐ சந்தித்துப் பேசினார். இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கனடாவில் உள்ள கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்
September 24th, 06:33 pm
புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.ஜி7 உச்சிமாநாட்டின் போது, இந்தியா - இத்தாலி பிரதமர்கள் சந்திப்பு
June 18th, 02:59 pm
கனடாவின் கனனாஸ்கிஸில் நேற்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை சந்தித்துப் பேசினார். இந்தியா – இத்தாலி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும், இது இருநாட்டு மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் திரு மோடி தெரிவித்தார்.நியூஸ் 18 தொலைக்காட்சி ஏற்பாடு செய்த எழுச்சிமிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
April 08th, 08:30 pm
இந்த உச்சிமாநாட்டின் மூலம் நம் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பளித்ததற்காக நியூஸ் 18 நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பங்களுடன் இணைத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், விவேகானந்தர் பிறந்த தினத்தன்று, வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளம் தலைவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இங்குள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர்களின் கனவுகளை மனவுறுதியின் வலிமையையும், வளர்ந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான அவர்களது ஆர்வத்தையும் காண முடிவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்த அமிர்த காலம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தையும், மன வலிமையையும் அளிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சிமிகு இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரை
April 08th, 08:15 pm
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நியூஸ் 18 தொலைக்காட்சியின் எழுச்சி மிகு இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தற்காக அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியாவில் உள்ள இளைஞர்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதற்குப் பாராட்டு தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 'வளர்ச்சியடைந்த இந்தியாவின் தலைவர்கள் கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிகாட்டிய அவர், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து நிலைகளிலும் அது குறித்த தொடர் விவாதங்கள் சிறந்த சிந்தனைகளை வளர்க்க உதவும் என்று கூறினார். இது அமிர்த கால தலைமுறையினருக்கு உற்சாகமூட்டும் வகையிலும், வழிகாட்டியாகவும், திகழும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த உச்சி மாநாட்டின் வெற்றிக்கு தனது நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
March 18th, 02:40 pm
இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக அரங்கில் நாட்டிற்குப்ஸபெருமை சேர்த்துள்ளது.இந்தியா - இத்தாலி இடையிலான ராஜாங்க ரீதியிலான கூட்டு செயல் திட்டம் 2025-2029
November 19th, 09:25 am
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 2024 நவம்பர் 18 அன்று நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சந்தித்துக் கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இத்தாலி பிரதமர் திருமதி ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்தியா இத்தாலி ராஜாங்க கூட்டாண்மையின் இணையற்ற ஆற்றலுக்கு, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைக்கான கூட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம் மேலும் உத்வேகம் அளிக்க முடிவு செய்தனர். இந்த நோக்கத்திற்காக, இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
November 19th, 08:34 am
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டையொட்டி இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு பிரதமர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஜூன் மாதத்தில் இத்தாலியின் புக்லியாவில் பிரதமர் மெலோனி தலைமையில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டை முன்னிட்டு சந்தித்தனர். இந்தச் சவாலான காலகட்டத்தில் ஜி-7 அமைப்பை வழிநடத்தியதற்காக பிரதமர் மெலோனியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.நாட்டின் 78-வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகத் தலைவர்களின் வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
August 15th, 09:20 pm
பூடான் பிரதமரின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்த பிரதமர் கூறியதாவது:ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 07:00 pm
இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை
June 20th, 06:30 pm
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
June 18th, 05:32 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, பகீரத் சவுத்ரி அவர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மாநில அரசின் பிற அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பெருந்திரளாக கூடியுள்ள எனது விவசாய சகோதர சகோதரிகளே, என் காசியின் குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல நிதி உதவி வழங்கும் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
June 18th, 05:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (18-06-2024) நடைபெற்ற உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கும் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை விடுவித்தார். சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் அவர் விடுவித்தார். நிகழ்ச்சியின் போது, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேளாண் தோழிகள் (கிருஷி சகி) என்ற சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு
June 14th, 11:53 pm
இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஜப்பான் பிரதமர் திரு ஃபூமியோ கிஷிடா-வுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலி பிரதமருடன் திரு நரேந்திர மோடி சந்திப்பு
June 14th, 11:40 pm
இத்தாலியின் அபுலியாவில் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இத்தாலியக் குடியரசின் பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனியுடன், திரு நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, திருமதி மெலோனி வாழ்த்துத் தெரிவித்தார். ஜி-7 உச்சிமாநாட்டில் பங்கேற்க தமக்கு அழைப்பு விடுத்த இத்தாலிப் பிரதமர் திருமதி மெலோனிக்கு நன்றி தெரிவித்த திரு மோடி, வெற்றிகரமான உச்சிமாநாட்டின் நிறைவுக் குறித்து பாராட்டு தெரிவித்தார்.ஜி-7 உச்சிமாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 14th, 09:54 pm
முதலாவதாக இந்த உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காகவும் நமக்கு அன்பான விருந்து உபசாரம் அளித்ததற்காகவும் பிரதமர் மெலோனிக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதிபர் ஓலஃப் ஷோல்ஸ்-க்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். ஜி-7 உச்சிமாநாடு தனித்துவமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்தக் குழுவின் 50-வது ஆண்டின் ஜி-7 நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை அமர்வில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 09:41 pm
இத்தாலியின் அபுலியாவில் இன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் பகுதி குறித்த பரப்புரை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். குழுவின் 50-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அவர் வாழ்த்து தெரிவித்தார்.ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 14th, 04:25 pm
இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இன்று (14 ஜூன் 2024) இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள தமக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.