பின்லாந்து அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

March 05th, 11:55 am

பின்லாந்து அதிபர் அவர்களே, இந்த ஆண்டு ரைசினா உரையாடலில் உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த, துடிப்பான தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி

November 30th, 11:30 am

இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் அதிகரித்து வரும் இளைஞர்களின் பங்கேற்புக்கு பிரதமர் வரவேற்பு

November 09th, 10:00 pm

கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக திரு மோடி கூறினார். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் நமது கட்சியின் இளம் கட்சி நண்பர்களான திரு அண்ணாமலை,