1996 இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மேற்கொண்ட சிறப்பு கலந்துரையாடலின் தமிழாக்கம்

April 05th, 10:25 pm

உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அணி இந்திய மக்கள் இன்னும் அன்புடன் நினைவில் வைத்திருக்கும் ஒரு அணிஎன்று நான் உணர்கிறேன். நீங்கள் இந்திய அணியை வீழ்த்திய தருணத்தை நாடு மறக்கவில்லை.

1996 இலங்கை கிரிக்கெட் அணியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கலந்துரையாடல்

April 05th, 10:23 pm

இலங்கையின் கொழும்பில் நேற்று, 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்தகே கலந்துரையாடலின் போது, பிரதமரை சந்தித்ததில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், இந்திய மக்கள், அணியின் தாக்கத்தை ஏற்படுத்திய செயல்திறனை, குறிப்பாக நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய மறக்கமுடியாத வெற்றியை இன்னும் நினைவில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். அவர்களின் சாதனைகள் தேசத்தில் தொடர்ந்து எதிரொலிப்பதாக அவர் மேலும் கூறினார். 2010 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் வீரர் நடுவராகப் பணியாற்றியதைப் பார்த்ததை திரு மோடி நினைவு கூர்ந்தார். இந்தியாவின் 1983 உலகக் கோப்பை வெற்றி மற்றும் இலங்கை அணியின் 1996 உலகக் கோப்பை வெற்றியின் உருமாறும் தாக்கத்தை அவர் எடுத்துரைத்தார், இந்த மைல்கற்கள் கிரிக்கெட் உலகை எவ்வாறு மாற்றியமைத்தன என்பதை வலியுறுத்தினார். டி 20 கிரிக்கெட்டின் பரிணாம வளர்ச்சியை, 1996 போட்டிகளில் அப்போதைய இலங்கை கிரிக்கெட் அணி வெளிப்படுத்திய புதுமையான விளையாட்டு பாணியில் காணலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார். வீரர்களின் தற்போதைய முயற்சிகள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டிய அவர், அவர்கள் இன்னும் கிரிக்கெட் மற்றும் பயிற்சியாளர் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களா என்று விசாரித்தார்.