கனடா பிரதமர் இந்தியா வருகிறார்
February 26th, 10:40 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி, நாளை (2026 பிப்ரவரி 27) முதல் 2026 மார்ச் 2 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்தியாவுக்கான முதல் அரசு முறைப் பயணமாகும். பிப்ரவரி 27 அன்று, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மும்பை வந்தடைகிறார். அங்கு இரண்டு நாட்கள் அவர் பல்வேறு, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய – கனடா தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், புதுமை கண்டுப்பிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் அங்கு கலந்துரையாடவுள்ளார்.