மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.

யோகாவின் மாற்றத்தக்க தாக்கம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்

June 22nd, 08:13 am

சர்வதேச யோகா தினத்தின் சிறப்பான வெற்றி என்பது, யோகா உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல்நலன் பெறுவது மட்டுமின்றி, தன்னம்பிக்கையுடன் நேர்மறையான வாழ்க்கையை வாழவும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது என்பதற்கு சான்றாக அமைந்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

June 21st, 10:00 pm

சர்வதேச யோகா தினம் 2026-ஐ உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள சேவா தீர்த் வளாகத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது

June 21st, 03:51 pm

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 'சேவா தீர்த்' வளாகத்தில் இன்று யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

கொல்கத்தாவில் ஐ.என்.எஸ் அக்ரே, ஐ.என்.எஸ் துணகிரி மற்றும் ஐ.என்.எஸ் சன்ஷோதக் ஆகியவற்றின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 21st, 12:51 pm

கடல்சார் திறன் இல்லாமல் எந்தவொரு நாடும் பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது என்பதற்கு உலகமே சாட்சியாக இருக்கிறது. வளர்ச்சி கடலோடு பிணைந்துள்ளது, பாதுகாப்பு கடலோடு பிணைந்துள்ளது, செழுமை கடலோடு பிணைந்துள்ளது. இன்று, உலகின் பெரும்பாலான வர்த்தகம் கடல் வழித்தடங்கள் மூலமே நடைபெறுகிறது. உலகை இணைக்கும் பிரம்மாண்டமான தரவு வலைப்பின்னல்கள் கடலுக்கு அடியில் கடந்து செல்கின்றன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்று போர்கப்பல்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்

June 21st, 12:50 pm

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், அதிநவீன எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாத போர்க்கப்பளான ஐஎன்எஸ் துனாகிரி, பெரிய அளவிலான ஆய்வுக்கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவல்ல ஆழ்கடல் அல்லாத பகுதிக்கு ஏற்ற கப்பலான ஐஎன்எஸ் அக்ரே ஆகிய மூன்று போர்க் கப்பல்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் நாட்டின் கடல்சார் செயல்பாட்டுத் திறன்களை கணிசமான அளவில் வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தி, புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். இதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு உதிரி பாகங்களைக் கொண்ட இந்தக் கப்பல்கள், தற்சார்பு இந்தியா என்ற நாட்டின் நிலைபாட்டிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

12வது சர்வதேச யோகா தினம்: கொல்கத்தாவிலிருந்து சில காட்சிகள்

June 21st, 06:46 am

பிரதமர் நரேந்திர மோடி, கொல்கத்தாவின் புகழ்பெற்ற ரெட் ரோட்டில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினார். மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த காலத்தால் அழியாத கொடையான யோகாவைக் கொண்டாடுவதற்காக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன் அவர் இணைந்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், சமநிலை, நல்வாழ்வு மற்றும் மனித ஒற்றுமைக்கான ஒரு வழியாக யோகாவை எடுத்துரைத்ததோடு, இந்த ஆண்டின் கருப்பொருளான “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்பதையும் வலியுறுத்தினார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 12-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 21st, 06:45 am

இன்று, யோகா தினத்தை முன்னிட்டு, கொல்கத்தா மக்கள், குறிப்பாக வங்காளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 'தூய்மைக்கான யோகா' குறித்து நான் பாராட்ட விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான முன்னெடுப்பு – தூய்மையே வரவேற்பு திட்டத்திற்காக இங்கே மேற்கொள்ளப்பட்டுள்ள நீடித்த முயற்சிகளும், குடிமைப் பணிகளும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக மாறியுள்ளன.

பிரதமர் திரு நரேந்திர மோடி, கொல்கத்தாவில் 12-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டத்தில் பங்கேற்றார்

June 21st, 06:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.06.2026) கொல்கத்தாவின் ரெட் ரோட்டில் 12-வது சர்வதேச யோகா தின தேசிய கொண்டாட்டங்களில் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்களுடன் பொது யோகா நெறிமுறை அமர்வில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஜூன் 21-ம் தேதி உலகின் பல பகுதிகளில் ஆண்டின் மிக நீண்ட நாளாகக் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார். யோகா, மனிதகுலத்தின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தாரகேஸ்வரில் நடைபெற்ற மேற்கு வங்காள தின விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 20th, 05:13 pm

இன்றைய நிகழ்வு, இந்தப் புதிய திட்டங்களின் தொடக்கம், புதிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வங்காளத்தின் உறுதிப்பாட்டிற்குச் சான்றாகும். மக்களின் முகத்தில் இருக்கும் இந்த ஒளி, ஒவ்வொரு கிராமத்திலும் காணப்படும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை - உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன். ஒரு வாக்கு, ஒரே தேர்தல், எவ்வளவு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு வங்காளமே மிகச் சிறந்த சாட்சி.

ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

June 20th, 05:00 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 20th, 01:10 pm

நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government

June 20th, 01:00 pm

PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.

ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

June 19th, 11:54 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.

India-France partnership is emerging as a strong pillar of trust, stability and cooperation: PM Modi in Paris

June 18th, 11:41 pm

Addressing the Indian community in Paris, PM Modi highlighted India’s transformative growth over the past 12 years across infrastructure, digital technology, manufacturing, defence, space, innovation, healthcare and social development. He underscored the growing strength of the India-France Strategic Partnership, praised the Indian diaspora for serving as a vital bridge between the two nations and highlighted yoga and football as bonds connecting India and France.

பாரீஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் உரையாற்றினார்

June 18th, 09:30 pm

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 18 அன்று பாரீஸில் திரண்டிருந்த பெருந்திரளான இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். நிகழ்ச்சி இடத்திற்கு வருகை தந்த பிரதமருக்கு, தாய்நாட்டின் மீது புலம்பெயர் மக்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சிகரமான மற்றும் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது

June 10th, 01:50 pm

இந்தியாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ந்து நீண்டகாலம் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பாராட்டுத் தெரிவித்து மத்திய அமைச்சரவை இன்று (10.06.2026) தீர்மானம் நிறைவேற்றியது.

Yoga is the best way to maintain a healthy lifestyle with minimal expense: PM Modi at World Yogasana Championship in Ahmedabad

June 04th, 06:41 pm

PM Modi inaugurated the first World Yogasana Championship in Ahmedabad, calling yoga India’s timeless gift to humanity and expressing confidence that Yogasana will gain recognition as a competitive sport in global multi-sport events, including the Olympics. Highlighting yoga’s role in health, wellness and healthy ageing, he urged participants to become ambassadors of the ‘Yoga 365’ campaign and spread yoga’s message worldwide.

முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியை அகமதாபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

June 04th, 06:40 pm

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று முதலாவது உலக யோகாசன சாம்பியன் போட்டியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் உலக விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்க வந்துள்ள சர்வதேச விளையாட்டு வீரர்களை வரவேற்ற அவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுவது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும் என்றார். ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த சாம்பியன் போட்டி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் இரட்டிப்பு பலனை நமக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இம்முறை சர்வதேச யோகா தினத்தின் முதன்மை நிகழ்வு மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

‘Restoring Balance’ is a global urgency: PM Modi highlights global health challenges at WHO Global Summit on Traditional Medicine

December 19th, 08:11 pm

PM Modi addressed the closing ceremony of the Second WHO Global Summit on Traditional Medicine in New Delhi. In his address, he noted that the summit is witnessing a confluence of traditional knowledge and modern practices. He highlighted that a special global discussion on Ashwagandha was organised during the summit. The PM called upon all stakeholders to advance traditional medicine with trust, respect and responsibility.