‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மேற்கு ஆசிய நெருக்கடியைச் சமாளிக்க 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையின் மீது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

March 29th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேற்கு ஆசிய மோதல் குறித்துப் பேசியதோடு, இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வதந்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், அரசாங்கம் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஞான பாரதம் கணக்கெடுப்பு, விளையாட்டு மற்றும் உடற்தகுதி, நீர் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சூரிய சக்தி போன்ற முக்கியத் தலைப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.

Tiruchirappalli turns out in huge numbers for PM Modi’s public meeting

March 11th, 06:00 pm

At a massive public meeting in Tamil Nadu’s Tiruchirappalli, Prime Minister Narendra Modi hailed Tiruchirappalli as a land of courage and faith, recalling the bravery of the Marudu Brothers and paying tribute to Major M. Saravanan for his sacrifice during the Kargil War. “Trichy is a land of courage and faith,” he said, adding that the Centre proudly honours Tamil Nadu’s culture and heritage. He also highlighted that C. P. Radhakrishnan, a son of the state, serves as the Vice President of India.

குஜராத்தின் நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

March 08th, 11:00 pm

லட்சாதிபதி சகோதரி: மகளிர் தினமான இன்று நாங்கள் பெற்றுள்ள மதிப்பும் கௌரவமும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

குஜராத்தின் நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்

March 08th, 10:32 pm

மகளிர் தினமான இன்று குஜராத்தில் நவ்சாரியில் லட்சாதிபதி சகோதரிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மனம் நிறைந்த உரையாடலை நடத்தினார். அப்போது மகளிருக்கு அதிகாரம் அளித்தலின் முக்கியத்துவத்தையும், சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவை வடிவமைப்பதில் தலைசிறந்த பெண்களின் பங்களிப்புகளைப் பிரதமர் கொண்டாடினார்

March 08th, 11:54 am

சர்வதேச மகளிர் தினத்தன்று, பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து வரும் பெண்களுக்கு தனது சமூக ஊடக தளங்களை ஒப்படைப்பதன் மூலம், இந்தியா முழுவதும் பெண்களின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடுவதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 08th, 11:50 am

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல் அவர்களே; நவ்சாரி நாடாளுமன்ற உறுப்பினரும், எனது அமைச்சரவை சகாவுமான மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல்; மதிப்பிற்குரிய ஊராட்சி உறுப்பினர்கள்; மேடையில் இருக்கும் லட்சாதிபதி சகோதரிகள்; பிற மக்கள் பிரதிநிதிகள்; பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும், குறிப்பாக எனது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் – உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

குஜராத் மாநிலம் நவ்சாரியில் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

March 08th, 11:45 am

குஜராத் மாநிலம் நவ்சாரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.03.2025)தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெரும் எண்ணிக்கையில் வந்திருந்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் அன்பு, பாசம், ஆசீர்வாதங்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். மகளிர் தினமான இந்தச் சிறப்பு நாளில் நாட்டின் அனைத்து பெண்களுக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மகா கும்பமேளாவில் கங்கை அன்னையின் ஆசீர்வாதம் தனக்கு கிடைத்தது என்றும், இன்று பெண் சக்தியின் மகா கும்பமேளாவில் தனக்கு ஆசீர்வாதம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜி-சஃபல் (வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அந்தியோதயா குடும்பங்களுக்கான குஜராத் அரசின் திட்டம்), ஜி-மைத்ரி (கிராமப்புற மக்களின் வருமானத்தை அதிகரிப்பற்கான குஜராத் அரசின் திட்டம்) ஆகிய இரண்டு திட்டங்கள் குஜராத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பல்வேறு திட்டங்களின் நிதி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட அவர், இந்த சாதனைக்காக அனைவரையும் வாழ்த்தினார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் சாதனையாளர்களிடம் தமது சமூக ஊடக தளங்களின் நிர்வாகத்தைப் பிரதமர்

March 08th, 11:26 am

பெண்களின் சக்திக்கும் சாதனைகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சமூக ஊடக தளங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, பல்வேறு துறைகளில் முத்திரை பதித்துள்ள பெண்களுக்கு வழங்கியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்த உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

March 08th, 10:36 am

சர்வதேச மகளிர் தினத்தில் பெண் சக்திக்குத் தலை வணங்குவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தில், உணவுப் பாதுகாப்பு குறித்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

March 07th, 05:34 pm

மூன்றாவது முறையாக பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை நாட்டு மக்களும், குஜராத் மக்களும் எனக்கு வழங்கியிருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். அதற்குப் பிறகு சூரத்துக்கு நான் வருவது இதுவே முதல் முறையாகும். நான் எப்போதும் உங்களுக்கு கடன்பட்டிருப்பேன்; என் வாழ்க்கையை வடிவமைப்பதில் நீங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளீர்கள். இன்று நான் சூரத் வந்திருக்கும் வேளையில், சூரத்தின் உணர்வை என்னால் எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்? வேலை மற்றும் தொண்டு - இந்த இரண்டு விஷயங்கள் சூரத்தை உண்மையிலேயே சிறப்பானதாக்குகின்றன. ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது மற்றும் அனைவரின் முன்னேற்றத்தையும் கொண்டாடுவது சூரத்தின் ஒவ்வொரு மூலையிலும் காணக்கூடிய ஒன்று. இன்றைய நிகழ்ச்சி சூரத்தின் இந்த உணர்வு மற்றும் உணர்வை மேம்படுத்துவதில் ஒரு முன்னோக்கிய படியாகும்.

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

March 07th, 05:30 pm

சூரத் உணவுப் பாதுகாப்பு செறிவூட்டல் இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, சூரத்தின் லிம்பாயத்தில் இன்று தொடங்கி வைத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2.3 லட்சம் பயனாளிகளுக்கு பிரதமர் உதவிகளை வழங்கினார். திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், சூரத் நகரின் தனித்துவமான உணர்வை வலியுறுத்தி, பணி மற்றும் அறப்பணிகளுக்கான அதன் வலுவான அடித்தளத்தை எடுத்துரைத்தார். கூட்டு ஆதரவு மற்றும் அனைவரின் வளர்ச்சியையும் கொண்டாடுவதன் மூலம் வரையறுக்கப்படுவதால், நகரத்தின் சாராம்சம் எவ்வாறு மறக்க முடியாததாகிறது என்பதை அவர் விளக்கினார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 119-வது அத்தியாயத்தில், 23.02.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 23rd, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் உங்களனைவரையும் வரவேற்கிறேன். இன்றைய நாட்களில் சேம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து இடங்களிலும் கிரிக்கெட்டுக்கான சூழல் நிலவி வருகிறது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதில் இருக்கும் புளகாங்கிதம் என்ன என்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். ஆனால் இன்று நான் உங்களனைவரிடத்திலும் கிரிக்கெட்டைப் பற்றியல்ல, பாரதம் விண்வெளியில் சதம் அடித்திருப்பதைப் பற்றி உரையாட இருக்கிறேன். கடந்த மாதம் தான் இஸ்ரோ விண்ணில் செலுத்திய 100ஆவது செயற்கைக்கோளின் சாட்சியாக தேசமே இருந்தது. இது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, மாறாக அன்றாடம் புதிய உச்சங்களைத் ஸ்பரிசிக்கும் நமது உறுதிப்பாட்டையும் அடையாளப்படுத்துகிறது. நமது விண்வெளிப்பயணப் பயணம் மிக எளிய முறையிலே தான் தொடங்கியது. இதிலே ஒவ்வோர் அடியிலும் சவால்கள் இருந்தன. ஆனால், நமது விஞ்ஞானிகள் வெற்றிக்கொடியை நாட்டியபடி தொடர்ந்து முன்னேறினார்கள். காலப்போக்கில் விண்வெளியின் இந்தப் பாய்ச்சலில் நமது வெற்றிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகத் தொடங்கியது. ஏவுகலன் அமைப்பதாகட்டும், சந்திரயானின் வெற்றியாகட்டும், மங்கல்யானாகட்டும், ஆதித்ய எல்-1 அல்லது ஒரே ஒரு ஏவுகலன் மூலமாக, ஒரே முறையில், 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வரலாறுகாணா செயல்பாடாகட்டும், இஸ்ரோவின் வெற்றித்தொடர் மிகவும் பெரியது. கடந்த பத்தாண்டுகளில் சுமார் 460 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றிலே மற்ற நாடுகளின் பல செயற்கைக்கோள்களும் அடங்கும். அண்மை ஆண்டுகளின் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், விண்வெளி விஞ்ஞானிகள் கொண்ட நமது குழுவிலே பெண்சக்தியின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இன்று விண்வெளித்துறை நமது இளைஞர்களுக்கு விருப்பமான ஒன்றாக ஆகியிருக்கிறது என்பது மிகுந்த உவகையை எனக்கு அளிக்கிறது. சில ஆண்டுகள் முன்பு வரை இந்தத் துறையில் ஸ்டார்ட் அப் குறித்தோ, தனியார் துறையின் விண்வெளி நிறுவனங்களின் எண்ணிக்கை பல நூற்றுக்கணக்காகும் என்றோ யார் தான் நினைத்தார்கள்!! வாழ்க்கையை விறுவிறுப்பான, சுவாரசியமான வகையில் அனுபவிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, விண்வெளித்துறை ஒரு மிகச் சிறப்பான தேர்வாக ஆகி வருகிறது.

For 10 years, AAP-da leaders sought votes on the same false promises. But now, Delhi will no longer tolerate these lies: PM

February 02nd, 01:10 pm

Prime Minister Modi addressed a massive and spirited rally in Delhi’s RK Puram, energizing the crowd with his vision for a Viksit Delhi and exposing the failures of the AAP-da government. He reaffirmed his commitment to fulfilling every promise and ensuring the city’s holistic development.

PM Modi Addresses Enthusiastic Crowd in Delhi’s RK Puram, Calls for Historic BJP Mandate

February 02nd, 01:05 pm

Prime Minister Modi addressed a massive and spirited rally in Delhi’s RK Puram, energizing the crowd with his vision for a Viksit Delhi and exposing the failures of the AAP-da government. He reaffirmed his commitment to fulfilling every promise and ensuring the city’s holistic development.

அருணாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற வளர்ச்சியடைந்த பாரதம் – வளர்ச்சியடைந்த வடகிழக்குப் பகுதி நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 09th, 11:09 am

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களே, முதலமைச்சர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, இணை அமைச்சர்களே, சக நாடாளுமன்ற உறுப்பினர்களே, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களே, இதர அனைத்து மக்கள் பிரதிநிதிகளே, இந்த மாநிலங்களைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே!

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்

March 09th, 10:46 am

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ. 55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த திரு நரேந்திர மோடி பல புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான உன்னதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியதாகும்.

பிரதமர் ஸ்வநிதி ஏழைகளின் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்பியுள்ளது: பிரதமர்

March 08th, 04:29 pm

பரம ஏழைகளின் வாழ்க்கையில் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கோடிட்டுக் காட்டினார்.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

March 08th, 04:26 pm

வீட்டின் மையமாகத் திகழும் பெணகளின் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

லட்சாதிபதி சகோதரி திட்டம் நாடு முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர்

March 08th, 04:20 pm

மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்கள் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வலுவான பிணைப்பாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 08th, 10:46 am

காலம் மாறி, ஒரு புதிய சகாப்தம் உதயமாகும் போது, அதற்கு ஈடுகொடுக்க வேண்டியது தேசத்தின் கடமையாகும். இன்று இங்கே பாரத மண்டபத்தில் இந்தப் பொறுப்பை நாடு நிறைவேற்றி வருகிறது. முதல் தேசிய படைப்பாளிகள் விருது, வளர்ந்து வரும் திறமையாளர்களை அங்கீகரிப்பதைக் குறிக்கிறது. இந்த விருது வரும் நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும். இந்த புதிய சகாப்தத்தை இயக்கும் இளைஞர்களை கௌரவிப்பதற்கும், படைப்பாற்றலைக் கொண்டாடுவதற்கும், படைப்பாளிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை அங்கீகரிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பு. இந்த விருது உள்ளடக்க படைப்பாளர்களுக்கு சிறந்த ஆதாரமாக செயல்படும். அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கும். இன்று நான் தேசிய படைப்பாளிகள் விருது பெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் அதில் முழு மனதுடன் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு மிகக் குறைந்த நேரமே இருந்தது. அதனால், இந்த நிகழ்வை எங்களால் அதிகம் பிரபலப்படுத்த முடியவில்லை. குறைந்த நேர கால அளவிலும்கூட, சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் படைப்பாளிகளை இதில் ஈடுபடுத்த முடிந்தது.