'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) என்ற தீர்மானம் நிச்சயமாக நிறைவேறும்: பிரதமர் மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில்
December 28th, 11:30 am
ஆண்டின் இறுதி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், 2025 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் உலகளாவிய தளங்களில் இந்தியா தனது முத்திரையைப் பதித்ததாக பிரதமர் மோடி கூறினார். 2026 ஆம் ஆண்டில் புதிய தீர்மானங்களுடன் நாடு முன்னேறத் தயாராக உள்ளது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) இளம் தலைவர்கள் உரையாடல், வினாடி வினா போட்டி, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 மற்றும் ஃபிட் இந்தியா இயக்கம் போன்ற இளைஞர்களை மையமாகக் கொண்ட முயற்சிகளையும் பிரதமர் எடுத்துரைத்தார்.குஜராத்தின் அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
August 25th, 06:42 pm
இன்று, நீங்கள் அனைவரும் உண்மையிலேயே ஒரு அருமையான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். இந்த லட்சக்கணக்கான மக்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவது எனக்கு எவ்வளவு அதிர்ஷ்டம். நான் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும், அது ஒருபோதும் போதாதுகுஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்
August 25th, 06:15 pm
குஜராத்தின் அகமதாபாத்தில் ரூ.5,400 கோடி மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், விநாயகர் சதுர்த்தியின் உற்சாகத்தில் ஒட்டுமொத்த நாடும் மூழ்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். விநாயகரின் ஆசிகளுடன், குஜராத்தின் முன்னேற்றம் சார்ந்த பல வளர்ச்சித் திட்டங்களின் மங்களகரமான தொடக்கத்தை குறிக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார். மக்களின் காலடியில் பல திட்டங்களை அர்ப்பணிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த வளர்ச்சி சார்ந்த முயற்சிகளுக்காக அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் வெளியிட்ட செய்தியின் தமிழாக்கம்
August 12th, 04:34 pm
64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்விற்காக, இந்தியாவிற்கு வந்துள்ள உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இந்தியாவில் பாரம்பரியம் புதுமைகளை சந்திக்கிறது, ஆன்மீகம் அறிவியலை சந்திக்கிறது, ஆர்வம் படைப்பாற்றலை சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தை கவனித்து முக்கிய கேள்விகளைக் கேட்டு வருகின்றனர். உதாரணமாக, 5 ஆம் நூற்றாண்டில், ஆர்யபட்டா பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தார். பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறியவரும் அவரே. உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்!18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்
August 12th, 04:33 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் 18வது சர்வதேச வானியல் மற்றும் வானியற்பியல் ஒலிம்பியாட் நிகழ்வில் உரையாற்றினார். இந்த நிகழ்வில், 64 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் இணைவதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சர்வதேச ஒலிம்பியாட் நிகழ்விற்காக இந்தியா வந்துள்ளவர்களை அன்புடன் வரவேற்றார். இந்தியாவில், பாரம்பரியம் புதுமையையும், ஆன்மீகம் அறிவியலையும், ஆர்வம் படைப்பாற்றலையும் சந்திக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியர்கள் வானத்தைக் கவனித்து முக்கிய கேள்விகளை எழுப்பி வருகின்றனர் என்று திரு. மோடி கூறினார். 5 ஆம் நூற்றாண்டில் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்து, பூமி அதன் அச்சில் சுழல்கிறது என்று முதன்முதலில் கூறிய ஆர்யபட்டாவின் உதாரணத்தை அவர் மேற்கோள் காட்டினார். உண்மையில், அவர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி வரலாற்றை உருவாக்கினார்! என்று பிரதமர் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2025 தொடங்குவதையொட்டி பிரதமரின் உரை
July 21st, 10:30 am
மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 21st, 09:54 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்தார். தனது கருத்துக்களில், கொடூரமான பஹல்காம் படுகொலையைத் தொட்டு, பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் தலைமையின் ஒருங்கிணைந்த குரலைப் பாராட்டினார். டிஜிட்டல் இந்தியாவின் உலகளாவிய அங்கீகாரத்தையும், குறிப்பாக UPI-ஐயும் பிரதமர் குறிப்பிட்டார். நக்சலிசம் மற்றும் மாவோயிசம் குறைந்து வருவதாக அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியையும் பாராட்டினார்.வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணம் சென்று திரும்பிய குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை பிரதமர் வரவேற்றார்
July 15th, 03:36 pm
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை பிரதமர் இன்று வரவேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற முறையில், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் சாதனை நாட்டின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நடத்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
June 28th, 08:24 pm
இப்போது நீங்கள் தாய்நாடான, பாரத பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்கள் பெயரில் மங்களம் இருக்கிறது. உங்கள் பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும். இந்த நேரத்தில், நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் 140 கோடி இந்தியர்களின் உணர்வுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அனைத்து இந்தியர்களின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் என் குரல் பிரதிபலிக்கிறது. விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே முதலில் சொல்லுங்கள். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதா? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா?பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் உரையாடினார்
June 28th, 08:22 pm
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்தியரான இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். சுபன்ஷு சுக்லா தற்போது இந்திய தாய்நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அவர் அனைத்து இந்தியர்களின் இதயங்களுக்கும் மிக நெருக்கமானவர் என்று பிரதமர் குறிப்பிட்டார். சுபன்ஷுவின் பெயரே மங்களகரமானது என்றும், அவரது பயணம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தனிநபர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தாலும், அது 140 கோடி இந்தியர்களின் உணர்ச்சிகளையும் உற்சாகத்தையும் உள்ளடக்கியது என்று திரு. மோடி கூறினார். சுபன்ஷுவுடன் பேசிய குரல், முழு நாட்டின் கூட்டு ஆர்வத்தையும் பெருமையையும் சுமந்து சென்றதாகவும், விண்வெளியில் இந்தியாவின் கொடியை ஏற்றியதற்காக சுபன்ஷுவுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். சுபன்ஷுவின் நல்வாழ்வு குறித்தும், விண்வெளி நிலையத்தில் எல்லாம் சரியாக உள்ளதா என்றும் திரு. மோடி விசாரித்தார்.இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களைச் சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் வரவேற்றுள்ளார்
June 25th, 01:30 pm
இந்தியா, ஹங்கேரி, போலந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சுமந்து செல்லும் வெற்றிகரமான விண்வெளி பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வரவேற்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதலாவது இந்திய விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.