இந்தியா - ஃபிஜி கூட்டு அறிக்கை: நட்புறவின் அடையாளமான கூட்டணி

August 25th, 01:52 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஃபிஜி குடியரசின் பிரதமர் திரு. சிதிவேனி ரபுகா, 2025 ஆகஸ்ட் 24 முதல் 26 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்துள்ள பிரதமர் ரபுகா, அவரது துணைவியார், சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சர் திரு. அன்டோனியோ லாலபலவு மற்றும் ஃபிஜி அரசின் மூத்த அதிகாரிகள் குழுவுடன் அவர் புதுதில்லி வந்துள்ளார்.