குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 20th, 11:00 am

குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!

குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்

September 20th, 10:30 am

குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023 இல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

October 17th, 11:10 am

உலகம் முழுவதிலுமிருந்து வரும் விருந்தினர்கள், எனது அமைச்சரவை சகாக்கள், கோவா மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பிற பிரமுகர்கள், பெண்கள் மற்றும் பெருமக்களே வணக்கம் !

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்

October 17th, 10:44 am

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பதிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2023) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047 என்ற செயல்திட்ட வரைவையும் பிரதமர் வெளியிட்டார். இந்த எதிர்காலத் திட்டத்திற்கு இணங்க, இந்தியக் கடல்சார் நீலப் பொருளாதாரத்திற்கான அமிர்தகாலப் பார்வை 2047-உடன் இணைந்த ரூ. 23,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.

2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 02nd, 11:00 am

‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ’ பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 02nd, 10:59 am

‘கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021-ஐ’ பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் திரு பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திர பிரதான், திரு மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சமூக வலைதள மூலை ஜனவரி 11, 2018

January 11th, 08:01 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.