பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை
June 07th, 02:00 pm
பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 07th, 01:26 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்த பங்கேற்பாளர்களை பிரதமர் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்த பிரான்ஸ் அரசுக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அடுத்து நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் வீடியோ செய்தி மூலம் பிரதமரின் உரை
April 04th, 09:46 am
மரியாதைக்குரிய நாடுகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், வணிகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள எனது அன்பான நண்பர்களே!பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான 5வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
April 04th, 09:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று 5வது சர்வதேச பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்பு-2023 மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றினார்.பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச மாநாட்டில் பிரதமரின் உரை
May 04th, 12:15 pm
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக் கான சர்வதேச நான்காவது மாநாட்டில் உங்களுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவரும் விடுபட்டு விடக்கூடாது என்பதே நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளார்ந்த நோக்கம் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் துவக்க உரை வழங்கினார்
May 04th, 10:29 am
பேரிடரை எதிர்கொள்வதற்கான நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று துவக்க உரையாற்றினார். ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு ஸ்காட் மாரிசன், கானா அதிபர் மாண்புமிகு நானா அட்டோ டன்க்வா அகுஃபோ-அட்டோ, ஜப்பான் பிரதமர் மாண்புமிகு ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் மாண்புமிகு ஆண்ட்ரி நாரினா ரஜோலினா ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினார்கள்.பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியின் மூன்றாவது ஆண்டு மாநாட்டில் பிரதமரின் உரை
March 17th, 02:36 pm
PM Modi addressed the opening ceremony of International Conference on Disaster Resilient Infrastructure. PM Modi called for fostering a global ecosystem that supports innovation in all parts of the world, and its transfer to places that are most in need.சர்வதேச பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் உரை
March 17th, 02:30 pm
ஃபிஜி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அரசுகளில் பணியாற்றுவோர், சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார்துறை உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.