You have not just increased the number of medals, you have prepared an entire generation: PM Modi to CWG Champions
August 10th, 10:00 am
PM Modi interacted with India’s CWG champions, highlighting that he has been regularly meeting athletes over the last 12 years. The champions shared their experiences at the CWG, including their preparation, defeating Pakistan on Kargil Vijay Diwas and the success of the Khelo India scheme. PM Modi ended the interaction with the phrase, “Jo khelega, woh khilega.”காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.Prime Minister hosts Commonwealth Games 2026 medal winners
August 09th, 10:07 pm
PM Modi met and interacted with India’s outstanding medal winners at the CWG 2026, during which the champions shared their experiences from the Games. The PM lauded the athletes’ achievements, noting that they inspire many youngsters to take up sports.நாட்டு மக்கள் அனைவரும் இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தில் பங்கேற்க பிரதமர் அழைப்பு
August 09th, 07:20 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, 'ஹர் கர் திரங்கா' எனப்படும் இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பங்களிப்பிற்கான தங்களின் கூட்டு உறுதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மூவண்ணக் கொடியானது இந்தியாவின் பெருமைக்குரிய சின்னம் என்றும், தேசத்திற்காகத் தங்களால் இயன்றதைச் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் அது ஒரு நிலையான உத்வேகத்தின் ஊற்று என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தினார்
August 02nd, 08:38 pm
சுதந்திரப் போராட்ட வீரர் திரு பிங்காலி வெங்கையாவின் 150-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.தன்னலமற்ற தியாகத்தின் நிலைத்திருக்கும் மரபு குறித்த சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
July 06th, 12:41 pm
மற்றவர்களின் நலனுக்காக தியாகம் செய்பவர்கள் அமரத்துவம் பெறுவதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
June 26th, 12:50 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.ஹஸ்ரத் இமாம் ஹுசைனுக்கு பிரதமர் மரியாதை
June 26th, 12:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹஸ்ரத் இமாம் ஹுசைனின் காலத்தால் அழியாத தியாகத்தையும், உண்மை, நீதி ஆகியவற்றுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் நினைவு கூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இமாம் ஹுசைனின் வாழ்க்கையும் தியாக மரணமும், தைரியம், உறுதி ஆகியவற்றின் சக்திக்கு ஒரு நிலையான நினைவூட்டலாக நிற்கின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.உற்சாகமும், செயல்பாடுகளும் நாட்டை செழிப்படையச் செய்யும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 24th, 03:34 pm
கூட்டு அர்ப்பணிப்பு, முயற்சிகள் மூலம் நாட்டின் வளம் என்றும் நிலைத்திருக்கும் என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த உணர்வே சமூகத்திற்கு புதிய சக்தியையும், வளர்ச்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்துகின்றன.டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்து சமஸ்கிருத சுபாஷிதத்தை பகிர்ந்துள்ளார்
June 23rd, 03:39 pm
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டைக் கட்டமைப்பதில் அவருடைய பெரும் பங்களிப்பு குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.ஒடிசா மாநில அரசின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
June 20th, 01:10 pm
நமது ஒடிசா மாநிலம் இந்நாட்களில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. கடந்த வாரம்தான் ராஜா திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெகநாதரின் ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளும் முழு உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன. மயுர்பஞ்சில் நடைபெறவுள்ள பரிபடா ரத யாத்திரை குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.PM Modi launches development projects at Pahadpur on the completion of two years of the Odisha Government
June 20th, 01:00 pm
PM Modi participated in a programme marking two years of the Odisha Government in Pahadpur village in Mayurbhanj. The PM wished President Murmu on her birthday, praising her dedication to public service, humility, and commitment to nation-building. In his address, he highlighted the state's rapid development and launched development projects worth over ₹47,600 crore. He announced that Pahadpur will be developed as a Solar Village and also highlighted major investments across infrastructure, industry and energy.குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
June 20th, 08:32 am
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார்
June 20th, 08:30 am
மேற்கு வங்க மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.உண்மை, சேவை, கற்றல், செயல் ஆகியவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 18th, 09:23 am
உண்மையைக் கடைபிடிக்கும் போது செல்வம் சேரும் என்றும், தன்னலமற்ற சேவையாற்றும் போது புகழ் வந்தடையும் என்றும் தொடர் முயற்சியால் அறிவு வளரும் என்றும் செயல் மூலம் ஞானம் மேம்படும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த மாண்புகள் தனிநபரின் நடத்தையை வடிவமைப்பதிலும் கூட்டு வளர்ச்சிக்குப் பங்களிப்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மரியாதை, பாராட்டு ஆகியவற்றின் மதிப்பு குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 17th, 09:05 am
அன்புடன் கூடிய மரியாதையும், அங்கீகாரமும் ஒரு தனிநபரை மதிப்புமிக்கவராகவும், பெருமையுடையவராகவும் திருப்தி உடையவராகவும் உணரச் செய்வதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுபோன்ற அங்கீகாரம், தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமின்றி, ஒருவரை புத்துணர்ச்சி உடையவராகவும், உற்சாகமுடையவராகவும் மாற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.விவேகம், சிந்தனையுடன் கூடிய முடிவு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
June 16th, 08:53 am
பொறுமை, ஞானம், தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் வழிநடத்தப்படும் நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி, வளமைக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உரிய சிந்தனை, கவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் ஒவ்வொரு வெற்றியும் கட்டமைக்கப்படுவதால் ஒவ்வொரு தீர்மானத்திற்கும் கவனமான புரிதல் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.Bharat Innovates is becoming a bridge between Indian talent and European capital: PM Modi in Nice, France
June 14th, 04:36 pm
PM Modi and French President Emmanuel Macron jointly inaugurated Bharat Innovates 2026 in Nice, France. Addressing a gathering, PM Modi highlighted India’s deep-tech revolution and the transformative potential of AI, satellite technology, advanced manufacturing and clean energy. He called for trusted, inclusive and human-centric innovation, while reaffirming India’s vision of becoming a global innovation hub.பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
June 14th, 03:00 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 07:25 pm
இந்தியாவின் பிரதமராக 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள திரு. நரேந்திர மோடி -க்கு குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள அன்பான வாழ்த்துகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் நம்பிக்கையும், ஆசியும், தேச சேவையில் மேலும் கடுமையாக உழைக்கத் தன்னை ஊக்குவிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.