The commissioning of INS Agray, INS Dunagiri and INS Sanshodhak is a reflection of India's increasing self-reliance: PM Modi in Kolkata
June 21st, 12:51 pm
PM Modi has commissioned three indigenously designed and built naval ships - INS Dunagiri, INS Sanshodhak and INS Agray in Kolkata, West Bengal. Speaking on the occasion, he said the event represented an important milestone in the journey towards an Aatmanirbhar Bharat, adding that around 40 indigenously built warships and submarines have been inducted into the Indian Navy over the past few years.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்று போர்கப்பல்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்
June 21st, 12:50 pm
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், அதிநவீன எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாத போர்க்கப்பளான ஐஎன்எஸ் துனாகிரி, பெரிய அளவிலான ஆய்வுக்கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவல்ல ஆழ்கடல் அல்லாத பகுதிக்கு ஏற்ற கப்பலான ஐஎன்எஸ் அக்ரே ஆகிய மூன்று போர்க் கப்பல்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் நாட்டின் கடல்சார் செயல்பாட்டுத் திறன்களை கணிசமான அளவில் வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தி, புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். இதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு உதிரி பாகங்களைக் கொண்ட இந்தக் கப்பல்கள், தற்சார்பு இந்தியா என்ற நாட்டின் நிலைபாட்டிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
December 04th, 08:41 am
கடற்படை தினமான இன்று (04.12.2025), கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நமது கடற்படை, அசாத்தியமான துணிச்சலுக்கும் உறுதித் தன்மைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது கடற்படையினர் நமது கடற்கரைகளையும் கடல்சார் நலன்களையும் பாதுகாக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியைத் தாம் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடற்படையின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
October 21st, 09:30 am
இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, ஒரு புறம் பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant
October 20th, 10:30 am
In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்
October 20th, 10:00 am
ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
January 15th, 11:08 am
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 15th, 10:30 am
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.நைஜீரியாவில் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 17th, 07:20 pm
எனக்கு அளிக்கப்பட்ட உற்சாகமான வரவேற்புக்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று நேரத்திற்கு முன்பு, அதிபர் டினுபு நைஜீரியாவின் தேசிய விருதை எனக்கு வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவம் மோடிக்கு மட்டுமல்ல; இது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், இங்குள்ள இந்திய சமூகத்தினரான உங்கள் அனைவருக்கும் சொந்தமானது. இந்த கவுரவத்தை உங்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.நைஜீரியாவில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 17th, 07:15 pm
பிரதமராக நைஜீரியாவுக்கு தாம் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று கூடியிருந்தவர்களிடம் தெரிவித்த திரு மோடி, கோடிக்கணக்கான இந்தியர்களின் நல்வாழ்த்துகளை தம்முடன் சேர்த்துக் கொண்டதாகவும் கூறினார். நைஜீரியாவில் இந்தியர்களின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறினார். கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருதை தமக்கு வழங்கியதற்காக அதிபர் டினுபுவுக்கும், நைஜீரிய மக்களுக்கும் நன்றி தெரிவித்த திரு மோடி, இந்த விருதை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அர்ப்பணித்தார்.அயோத்தியில் பாலராமர் பிரதிஷ்டையின்போது பிரதமர் திரு நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 22nd, 05:12 pm
வணக்கத்திற்குரிய சபையோர்களே, அனைத்து துறவிகள், முனிவர்கள், இங்கு கூடியுள்ள அனைத்து ராம பக்தர்கள், உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் நம் அனைவருடனும் இணைந்துள்ளவர்கள், உங்கள் அனைவருக்கும் வணக்கம், அனைவருக்கும் ராம நாம வாழ்த்துக்கள்அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் ஸ்ரீ குழந்தை ராமரின் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் பங்கேற்றார்
January 22nd, 01:34 pm
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலில் குழந்தை ராமர் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோயில் கட்டுவதற்குப் பங்களித்தத் தொழிலாளர்களுடன் திரு மோடி கலந்துரையாடினார்.கேரள மாநிலம் கொச்சியில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
January 17th, 12:12 pm
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்களே, முதலமைச்சர் திரு பினராயி விஜயன் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே!கேரள மாநிலம் கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
January 17th, 12:11 pm
கேரள மாநிலம் கொச்சியில் ரூ.4,000 கோடி மதிப்பிலான 3 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் (சி.எஸ்.எல்) புதிய உலர் துறைமுகம் (என்.டி.டி), கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் சர்வதேசக் கப்பல் பழுதுபார்க்கும் வசதி (ஐ.எஸ்.ஆர்.எஃப்), கொச்சி புதுவைபீனில் உள்ள இந்தியன் எண்ணெய்க் கழகத்தின் எல்பிஜி இறக்குமதி முனையம் ஆகியவை இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் ஆகும். இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தன்னிறைவை உருவாக்குவதற்கும் பங்கு வகிக்கும்.மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழா தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்
January 12th, 01:15 pm
மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே , எனது அமைச்சரவை சகாக்கள் அனுராக் தாக்கூர், பாரதி பவார், நிசித் பிரமானிக், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், அரசின் பிற அமைச்சர்கள், புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் எனது இளம் நண்பர்களே!மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் தொடங்கி வைத்தார்
January 12th, 12:49 pm
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். சுவாமி விவேகானந்தர் மற்றும் ராஜமாதா ஜிஜாவ் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 - இளைஞர்களுக்காக, இளைஞர்களால்' என்ற கருப்பொருளில் மாநில அணியின் அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார், இதில் ரிதமிக் ஜிம்னாஸ்டிக்ஸ், மல்லாகம்ப், யோகாசனம் மற்றும் தேசிய இளைஞர் விழா பாடல் உள்ளிட்டவை நடைபெற்றன.India has a glorious history of victories, bravery, knowledge, sciences, skills and our naval strength: PM Modi
December 04th, 04:35 pm
PM Modi attended the program marking ‘Navy Day 2023’ celebrations at Sindhudurg. He also witnessed the ‘Operational Demonstrations’ by Indian Navy’s ships, submarines, aircraft and special forces from Tarkarli beach, Sindhudurg. Also, PM Modi inspected the guard of honor.மகாராஷ்டிராவின் சிந்துதுர்க்கில் 2023 கடற்படை தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார்
December 04th, 04:30 pm
மால்வான், தார்கர்லி கடற்கரையில் உள்ள சிந்துதுர்க் கோட்டையில் டிசம்பர் 4 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்க நாள், வீர் சிவாஜி மகாராஜாவின் மகிமை மற்றும் ராஜ்கோட் கோட்டையில் அவரது கண்கவர் சிலை திறப்பு மற்றும் இந்திய கடற்படையின் சாகசங்கள் ஆகியவை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் கூறினார். கடற்படை தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த திரு. மோடி, நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான வீரர்களுக்கு தலைவணங்கினார்.