மனதின் குரல் நிகழ்ச்சியின் 135-வது அத்தியாயத்தில் 28.06.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 11:30 am

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதி, நிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இந்த 6 மாதங்களில் நாம் மனதின் குரலிலே, நாட்டுமக்களின் அநேக சாதனைகள் குறித்து விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். ஜூன் மாதத்தில் கூட தேசத்தின் சில சாதனைகள் அரங்கேறியிருக்கின்றன. இவை நாட்டுமக்களை பெருமிதத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்த வெற்றிகள் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் தற்சார்போடு தொடர்புடையவை. தற்போது தான் கோல்காத்தாவிலே, கடற்படையோடு தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அங்கே ஐஎன்எஸ் தூனாகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரய் ஆகிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. இந்தக் கப்பல்களின் வடிவமைப்பும், தயாரிப்பும், அனைத்துமே நம் நாட்டிலேயே ஆனவை.

The commissioning of INS Agray, INS Dunagiri and INS Sanshodhak is a reflection of India's increasing self-reliance: PM Modi in Kolkata

June 21st, 12:51 pm

PM Modi has commissioned three indigenously designed and built naval ships - INS Dunagiri, INS Sanshodhak and INS Agray in Kolkata, West Bengal. Speaking on the occasion, he said the event represented an important milestone in the journey towards an Aatmanirbhar Bharat, adding that around 40 indigenously built warships and submarines have been inducted into the Indian Navy over the past few years.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மூன்று போர்கப்பல்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்

June 21st, 12:50 pm

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில், அதிநவீன எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாத போர்க்கப்பளான ஐஎன்எஸ் துனாகிரி, பெரிய அளவிலான ஆய்வுக்கப்பலான ஐஎன்எஸ் சன்சோதக், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவல்ல ஆழ்கடல் அல்லாத பகுதிக்கு ஏற்ற கப்பலான ஐஎன்எஸ் அக்ரே ஆகிய மூன்று போர்க் கப்பல்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பல்கள் நாட்டின் கடல்சார் செயல்பாட்டுத் திறன்களை கணிசமான அளவில் வலுப்படுத்துவதுடன், கடல்சார் விழிப்புணர்வை மேம்படுத்தி, புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டின் கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தக் கப்பல்கள் அனைத்தும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பிரிவால் வடிவமைக்கப்பட்டு, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். இதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட இந்தியத் தொழில்துறையின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது. 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுத் தயாரிப்பு உதிரி பாகங்களைக் கொண்ட இந்தக் கப்பல்கள், தற்சார்பு இந்தியா என்ற நாட்டின் நிலைபாட்டிற்குச் சான்றாகத் திகழ்கின்றன.

ஹூக்ளியில் நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்

June 19th, 11:54 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நடைபெற்ற மேற்கு வங்க தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியுடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் மாநில அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேற்கு வங்கம்: பாரம்பரியம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி என்பது இந்த ஆண்டுக்கான மேற்கு வங்க தினத்தின் கருப்பொருளாகும். இது மாநிலத்தின் கலாச்சாரச் வளம், சமூக நல்லிணக்கம், வளர்ச்சி சார்ந்த விருப்பங்களை பிரதிபலிப்பதாக உள்ளது.