கர்நாடகாவின் பெங்களூருவில் பல்வேறு மெட்ரோ திட்டங்களின் அடிக்கல் நாட்டல் மற்றும் தொடக்க விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
August 10th, 01:30 pm
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட் அவர்களே, முதல்வர் திரு சித்தராமையா அவர்களே, மத்தியில் உள்ள எனது சகாக்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு ஹெச்டி குமாரசாமி, திரு அஷ்வினி வைஷ்ணவ், திரு வி சோமன்னா, திருமதி ஷோபா அவர்களே, துணை முதல்வர் திரு டி.கே.சிவகுமார் அவர்களே, கர்நாடக அமைச்சர் திரு பி.சுரேஷ் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் திரு ஆர். அசோக் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு தேஜஸ்வி சூர்யா அவர்களே, டாக்டர் மஞ்சுநாத் அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு விஜயேந்திர எடியூரப்பா அவர்களே மற்றும் கர்நாடகாவின் எனது சகோதர சகோதரிகளே!கர்நாடகாவின் பெங்களூருவில் சுமார் ₹22,800 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
August 10th, 01:05 pm
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ₹ 7,160 கோடி மதிப்பிலான பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தின் மஞ்சள் வழித்தடப் பாதையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.08.2025) திறந்து வைத்தார். பெங்களூரு கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் மூன்று வந்தே பாரத் விரைவு ரயில்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கர்நாடக மாநிலத்தில் கால் வைத்தவுடன், தான் ஒரு சிறந்த உணர்வை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார். கர்நாடகாவின் கலாச்சார செழுமை, அதன் மக்களின் பாசம், இதயத்தை ஆழமாகத் தொடும் கன்னட மொழியின் இனிமை ஆகியவற்றை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, பெங்களூருவின் தலைமை தெய்வமான அன்னம்மா தாயின் பாதங்களில் மரியாதை செலுத்தி தமது உரையைத் தொடங்குவதாகக் கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, நடபிரபு கெம்பேகவுடா பெங்களூரு நகரத்திற்கு அடித்தளமிட்டதை நினைவுகூர்ந்த பிரதமர், கெம்பேகவுடா பாரம்பரியத்தில் வேரூன்றியதாக இந்த நகரம் உள்ளது என்பதை எடுத்துரைத்தார். முன்னேற்றத்தின் புதிய உயரங்களை இந்நகரம் எட்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெங்களூரு எப்போதும் சிறந்த உணர்வை பாதுகாத்து வருகிறது எனவும் இப்போது பெங்களூரு புதிய கனவுகளை நனவாக்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.புதுதில்லி எய்ம்ஸ் ஜஜ்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இன்போசிஸ் அறக்கட்டளையின் ஓய்வு இல்ல தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
October 21st, 10:31 am
அரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார் அவர்களே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பவார் அவர்களே, அரியான சுகாதாரத்துறை அமைச்சர் திரு அனில் விஜ் அவர்களே, இன்போசிஸ் அறக்கட்டளை தலைவர் திருமதி சுதா மூர்த்தி அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்!புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜஜ்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் அரக்கட்டளையின் ஓய்வு இல்லத்தை பிரதமர் திறந்துவைத்தார்
October 21st, 10:30 am
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஜஜ்ஜார் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின், இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் ஓய்வு இல்லத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார்.புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜாஜர் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக் கட்டியுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
October 20th, 04:28 pm
புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், ஜாஜர் வளாகத்தில் உள்ள தேசிய புற்றுநோய் மையத்தில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளைக் கட்டியுள்ள விஷ்ரம் சதன் கட்டிடத்தை பிரதமர், அக்டோபர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன்பின் அவர் உரையாற்றுகிறார்.