தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

March 11th, 05:45 pm

திரு பியூஷ் கோயல் அவர்களே, டாக்டர் எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு தங்கம் தென்னரசு அவர்களே, தமிழ்நாட்டைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்!

திருச்சிராப்பள்ளியில் ரூ. 5650 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

March 11th, 05:30 pm

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஏராளமான மாற்றகரமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திருச்சி மாநகருக்கு வந்திருந்தார். தூய்மையான எரிசக்தி, பெட்ரோலியம் சார்ந்த உற்பத்தி மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, கிராமப்புற சாலைகளின் வாயிலாக மேம்படுத்தப்பட்ட பன்முக இணைப்பு போன்ற துறைகளில் 5650 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் இதில் அடங்கும். “இந்தத் திட்டங்கள் எரிசக்தி அணுகல் மற்றும் இணைப்பை ஊக்குவிப்பதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்”, என்று நிகழ்ச்சியில் பேசுகையில் பிரதமர் கூறினார்.

மார்ச் 11 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

March 09th, 09:54 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மார்ச் 11, 2026 அன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். பிற்பகல் 1:30 மணியளவில், கேரளாவின் எர்ணாகுளத்தில் சுமார் 10,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுவார். அதன் பிறகு மாலை சுமார் 5:45 மணியளவில், திருச்சிராப்பள்ளியில் சுமார் 5,650 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுவார்.

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் இந்திய வருகை

September 09th, 07:03 pm

பராக்கா அணுமின் நிலைய செயல்பாடு, பராமரிப்புத் துறையில் எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (இஎன்இசி) - இந்திய அணுசக்தி ஒத்துழைப்பு நிறுவனம் (என்பிசிஐஎல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் இந்தியப் பயணம் (செப்டம்பர் 9-10, 2024)

September 09th, 07:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் 2024 செப்டம்பர் 9 முதல் 10 வரை, இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பட்டத்து இளவரசர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். நேற்று, புதுதில்லி வந்த அவரை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வரவேற்று அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவருடன் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் பெரிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது.