கடற்படை தினத்தையொட்டி கடற்படை வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து
December 04th, 08:41 am
கடற்படை தினமான இன்று (04.12.2025), கடற்படை வீரர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். நமது கடற்படை, அசாத்தியமான துணிச்சலுக்கும் உறுதித் தன்மைக்கும் அடையாளமாகத் திகழ்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நமது கடற்படையினர் நமது கடற்கரைகளையும் கடல்சார் நலன்களையும் பாதுகாக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளியைத் தாம் ஒருபோதும் மறக்க முடியாது என்றும் அந்த நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடியதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடற்படையின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.'மன் கீ பாத்' (மனதின் குரல்) என்பது மக்களின் கூட்டு முயற்சிகளை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு சிறந்த தளமாகும்: பிரதமர் மோடி
November 30th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்'தில் (மனதின் குரல்), அரசியலமைப்பு தின கொண்டாட்டங்கள், வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு நிறைவு, அயோத்தியில் தர்ம த்வஜ் ஏற்றுதல், ஐஎன்எஸ் 'மஹே' கப்பல் அறிமுகம் மற்றும் குருக்ஷேத்திராவில் சர்வதேச கீத மஹோத்சவம் உள்ளிட்ட நவம்பர் மாதத்தின் முக்கிய நிகழ்வுகளை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உணவு தானியங்கள் மற்றும் தேன் உற்பத்தியில் சாதனை, இந்தியாவின் விளையாட்டு வெற்றிகள், அருங்காட்சியகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் போன்ற பல முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். காசி-தமிழ் சங்கமத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.The Arya Samaj has fearlessly upheld and promoted the essence of Indianness: PM Modi at International Arya Mahasammelan 2025
October 31st, 07:00 pm
PM Modi attended and addressed the International Arya Mahasammelan 2025 in New Delhi. Speaking on the occasion, the PM expressed his deep reverence for Swami Dayanand Ji’s ideals. He emphasized that Swami Dayanand Ji rejected caste-based discrimination and untouchability. The PM highlighted that the occasion reflects the great legacy of social reform consistently advanced by the Arya Samaj and noted its historical association with the Swadeshi movement.Since 2014, the nation has once again witnessed Sardar Patel’s spirit of iron resolve: PM Modi at Rashtriya Ekta Diwas in Kevadia
October 31st, 09:00 am
While addressing the Rashtriya Ekta Diwas programme, PM Modi extended his heartfelt greetings and best wishes to all citizens on the occasion of Sardar Patel’s birth anniversary. He emphasized that after 2014, the nation once again witnessed a steely resolve inspired by Sardar Patel. He warned that the unity and internal security of the nation face a grave threat from infiltrators and outlined four foundational pillars of India’s unity, strengthening the spirit of ‘Ek Bharat, Shreshtha Bharat’.குஜராத் மாநிலம் கெவாடியாவில் தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் இது இரும்பு மனிதர் சர்தார் படேலின் இந்தியா, இது தனது பாதுகாப்பில் அல்லது சுயமரியாதையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது: பிரதமர்
October 31st, 08:44 am
குஜராத் மாநிலம் கெவாடியாவில் இன்று தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் சர்தார் படேலின் 150-வது பிறந்த தினம் வரலாற்று சிறப்புமிக்கது என்றார். நாடு முழுவதும் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் பற்றி எடுத்துரைத்த அவர், இதில் கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதாகவும் இதன் மூலம் புதிய இந்தியாவின் தீர்மானம் உறுதியாக உணரப்பட்டது என்றும் கூறினார். சர்தார் படேலின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றும் சிறப்பு அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்தார் படேலின் பிறந்தநாள் மற்றும் தேசிய ஒற்றுமை தின நிகழ்வையொட்டி 140 கோடி மக்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
October 21st, 09:30 am
இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, ஒரு புறம் பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant
October 20th, 10:30 am
In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்
October 20th, 10:00 am
ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.சுதேசி தயாரிப்புகள், உள்ளூர் மக்களுக்கான குரல்: பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பண்டிகை அழைப்பு.
September 28th, 11:00 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், பகத் சிங் மற்றும் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்திய கலாச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், நாடு முழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகள், ஆர்எஸ்எஸ்ஸின் 100 ஆண்டு பயணம், தூய்மை மற்றும் காதி விற்பனையில் ஏற்பட்ட எழுச்சி போன்ற முக்கிய தலைப்புகள் குறித்தும் அவர் பேசினார். நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான பாதை சுதேசியை ஏற்றுக்கொள்வதில் உள்ளது என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.குஜராத்தின் பாவ்நகரில் நடைபெற்ற ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
September 20th, 11:00 am
குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது நண்பர்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, சி.ஆர்.பாட்டில் அவர்களே, திரு மன்சுக் மாண்டவியா அவர்களே, திரு சாந்தனு தாக்கூர் அவர்களே, திருமிகு நிமுபென் பம்பானியா அவர்களே, நாடு முழுவதும் சுமார் 40 இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரமுகர்களே, முக்கிய துறைமுகங்களுடன் தொடர்புடைய மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களே, உயர் அதிகாரிகளே, இதர முக்கிய விருந்தினர்களே, எனது அன்பான சகோதர, சகோதரிகளே வணக்கம்!!குஜராத்தின் பாவ்நகரில் 'கடலில் இருந்து வளம்' என்ற நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் - ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்
September 20th, 10:30 am
குஜராத்தின் பாவ்நகரில் இன்று (20.09.2025) ₹34,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 'சமுத்திர சே சம்ரிதி' எனப்படும் கடலில் இருந்து வளம் என்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, நாடு முழுவதும் சேவை இயக்கம் நடைபெறுவதை எடுத்துரைத்தார். கடந்த சில நாட்களில் குஜராத்தில் பல சேவை சார்ந்த நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் இவற்றில் இதுவரை ஒரு லட்சம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். ஏராளமான நகரங்களில் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் அதில் தீவிரமாக பங்கேற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மாநிலம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட சுகாதார முகாம்கள் நடைபெறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாடு முழுவதும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.பிலிப்பைன்ஸ் அதிபருடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட ஊடக செய்தி
August 05th, 11:06 am
முதலாவதாக, இந்தியாவிற்கு அதிபர் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். இந்த ஆண்டு, இந்தியாவும் பிலிப்பைன்ஸும் தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. இந்த சூழலில், இந்தப் பயணம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகள் சமீபத்தியவை என்றாலும், நமது நாகரிக தொடர்பு பண்டைய காலத்துடன் தொடர்புடையது. ராமாயணத்தின் பிலிப்பைன்ஸ் பதிப்பு - மஹாராடியா லாவானா நமது ஆழமான வேரூன்றிய கலாச்சார பிணைப்புக்கு உள்ள சான்றாகும்.We will reduce terrorists to dust, their handlers will face unimaginable punishment: PM Modi in Lok Sabha
July 29th, 05:32 pm
Prime Minister Narendra Modi, speaking in the Lok Sabha during the special discussion on Operation Sindoor, strongly defended the military action taken in response to the April 22 terror attack in Pahalgam. He took sharp aim at the Congress, accusing it of undermining the morale of the armed forces. “India received support from across the world, but it is unfortunate that the Congress could not stand with the bravery of our soldiers,” the Prime Minister said.ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் விஜய் உத்சவ் (வெற்றி விழா) இந்திய ஆயுதப் படைகளின் வீரத்திற்கும் வலிமைக்கும் ஒரு சான்றாகும்: பிரதமர்
July 29th, 05:00 pm
பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட வலுவான, வெற்றிகரமான, தீர்க்கமான 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த சிறப்பு விவாதத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். அவையின் கூட்டத்தொடர் தொடக்கத்தில் ஊடகவியலாளர்களுடனான தமது உரையாடலை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த அமர்வு இந்தியாவின் வெற்றியின் கொண்டாட்டமாகவும், இந்தியாவின் புகழுக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறினார்.தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ஆடி திருவாதிரை திருவிழாவின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
July 27th, 12:30 pm
மதிப்பிற்குரிய ஆதீன மடாதிபதிகள் (தலைவர்கள்) அவர்களே, சின்மயா மிஷனின் துறவிகளே, தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் டாக்டர்.எல்.முருகன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு திருமாவளவன் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் தமிழக அமைச்சர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பரான திரு இளையராஜா அவர்களே,ஓதுவார்களே, பக்தர்களே, மாணவர்களே, கலாச்சார வரலாற்றாசிரியர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
July 27th, 12:25 pm
தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.மனதின் குரல் நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில், 29.06.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 29th, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, ஒருவர் புனித யாத்திரையாகப் புறப்படும் போது, ஒரே உணர்வு முதன்மையாக மனதில் எழும் – அது என்னவென்றால், ஒருவழியாக கடவுள் அழைத்துவிட்டார் என்பது தான். இந்த உணர்வுதான் நம்முடைய சமயப் பயணங்களின் ஆன்மாவாக விளங்குகிறது. இந்தப் பயணங்கள் உடலின் ஒழுங்குமுறைக்கும், மனதைச் சுத்தப்படுத்துவதற்கும், பரஸ்பர அன்பு, சகோதரத்துவம், இறைவனோடு ஒன்றிணையவுமான ஊடகமாக இருக்கின்றன. இவை தவிர, இந்த யாத்திரைகளின் ஒரு மிகப்பெரிய கோணம் இருக்கிறது. இந்த சமயப்பயணங்கள், சேவைக்கான சந்தர்ப்பங்களின் மாபெரும் நெறியாகவும் ஆகின்றது. எந்தவொரு பயணம் என்றாலும், எத்தனை நபர்கள் யாத்திரையை மேற்கொள்கிறார்களோ, அதைவிட அதிகமானவர்கள் இந்த தீர்த்தயாத்திரீகர்களுக்கு சேவைபுரியும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். பல இடங்களில் உணவிடங்களும், அன்னதானக் கூடங்களும் அமைக்கப்படுகின்றன. குடிநீர்ப் பந்தல்களை தெருவோரங்களில் மக்கள் அமைக்கிறார்கள். சேவை உணர்வோடு மருத்துவ முகாம்களும், இன்னபிற வசதிகளும் அமைக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள் தங்கள் பணத்தில் தீர்த்தயாத்திரை மேற்கொள்வோருக்கு தர்ம சத்திரங்களையும், அவர்கள் தங்கி இளைப்பாற அமைப்புகளையும் ஏற்படுத்துகிறார்கள்.ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரை
June 21st, 07:06 am
ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் முதலமைச்சர், எனது அன்பு நண்பர் சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள், கே. ராம்மோகன் நாயுடு அவர்களே, பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, சந்திரசேகர், பூபதி ராஜு ஸ்ரீனிவாஸ் வர்மா, மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களே, பிற பிரமுகர்கள் மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்!ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
June 21st, 06:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார்.