Prime Minister congratulates Indian contingent on winning Gold Medals at the 56th International Physics Olympiad (IPhO) 2026

July 13th, 01:13 pm

PM Modi congratulated the Indian contingent for winning Gold Medals at the 56th International Physics Olympiad (IPhO) 2026. He said their outstanding achievement reflects the limitless potential of India's Yuva Shakti and its passion for science and research.

உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025-ல் வரலாற்று சிறப்புமிக்க வகையில் செயலாற்றிய இந்திய குழுவுக்கு பிரதமர் வாழ்த்து

October 06th, 04:28 pm

புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025-ல் வரலாற்று சிறப்புமிக்க வகையில் செயலாற்றிய இந்திய பாரா தடகளக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களை இந்தியா வென்றது. நாட்டின் பாரா விளையாட்டுப் பயணத்தின் புதிய மைல் கல்லாகும். அத்துடன் முதல் முறையாக உலகளாவிய மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வை இந்தியா நடத்தியுள்ளதற்கும் திரு மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

June 02nd, 03:01 pm

தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார்.

செபக் தக்ரா உலகக் கோப்பை 2025-ல் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற ஆடவர் ரெகு அணிக்கு பிரதமர் வாழ்த்து

March 26th, 03:59 pm

செபக் தக்ரா உலகக் கோப்பை 2025 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றதற்காக அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

March 18th, 02:40 pm

இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக அரங்கில் நாட்டிற்குப்ஸபெருமை சேர்த்துள்ளது.

10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை வெளிப்படுத்திய இந்தியக் குழுவினருக்கு பிரதமர் பாராட்டு

December 10th, 08:19 pm

கோலாலம்பூரில் நடைபெற்ற 10-வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டுப் போட்டிகள் 2024-இல் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்திறனை வெளிப்படுத்திய இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.