Prime Minister extends greetings to the global Indian community on the occasion of Pravasi Bharatiya Diwas
January 09th, 11:58 am
The Prime Minister, Shri Narendra Modi today extended warm greetings to the global Indian community on the occasion of Pravasi Bharatiya Diwas.இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை
July 24th, 04:20 pm
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரின் உற்சாக வரவேற்புக்குப் பிரதமர் மகிழ்ச்சி
July 06th, 08:28 am
ரியோ டி ஜெனிரோவில் தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக பிரேசிலில் உள்ள இந்திய சமூகத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய கலாச்சாரத்துடன் அவர்கள் இணைந்திருக்கிறார்கள் என்பதும் இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். வரவேற்பிலிருந்து சில காட்சிகளையும் திரு நரேந்திர மோடி தமது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.PM Modi conferred with highest national award, the ‘Order of the Republic of Trinidad & Tobago
July 04th, 08:20 pm
PM Modi was conferred Trinidad & Tobago’s highest national honour — The Order of the Republic of Trinidad & Tobago — at a special ceremony in Port of Spain. He dedicated the award to the 1.4 billion Indians and the historic bonds of friendship between the two nations, rooted in shared heritage. PM Modi also reaffirmed his commitment to strengthening bilateral ties.டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
July 04th, 05:56 am
இந்த மாலைப் பொழுதில் உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. பிரதமர் திருமதி. கமலா அவர்களின் அற்புதமான உபசரிப்பு மற்றும் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.பிரதமர் திரு. நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோவில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் உரையாற்றினார்
July 04th, 04:40 am
டிரினிடாட் - டொபாகோ நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டுக் குடியரசின் பிரதமர் திருமதி கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசர், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை இந்திய வம்சாவளியினர் அன்புடன் வரவேற்றதுடன், இந்தோ-டிரினிடாடியன் பாரம்பரிய முறைப்படி வண்ணமயமான வரவேற்பும் அளித்தனர்.கானா குடியரசின் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை
July 03rd, 03:45 pm
ஜனநாயகம், கண்ணியம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு நிலமான கானாவில் இருப்பது ஒரு பாக்கியம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 1.4 பில்லியன் இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் நான் என்னுடன் கொண்டு வருகிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்
July 03rd, 03:40 pm
கானா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.07.2025) உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமராக திரு நரேந்திர மோடி உள்ளார். நாடாளுமன்றத் தலைவர் திரு அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின் கூட்டிய இந்த அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், இரு நாடுகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த உரை இந்தியா-கானா உறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிப்பதாக அமைந்தது. இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை இது பிரதிபலித்தது.கானா அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
July 03rd, 12:32 am
30 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் கானாவுக்கு வருகை தந்துள்ளார்.ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்
June 22nd, 05:27 pm
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வருகிறார்
April 22nd, 04:29 pm
அரச மேன்மைமிகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் ஜெட்டாவிற்கு வந்தார். சிறப்பு மரியாதையாக, சவுதி வான்வெளியில் நுழைந்த பிரதமர் மோடியின் விமானத்தை சவுதி விமானப்படை ஜெட் விமானங்கள் அழைத்துச் சென்று, ஜெட்டாவிற்கு அழைத்துச் சென்றன. பிரதமர் மோடிக்கு ஜெட்டாவில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சவுதி அரேபியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பார்.இலங்கை அதிபருடன் இணைந்து, கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
April 05th, 11:30 am
இன்று அதிபர் திசநாயகாவால் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாகும். இந்த விருது என்னை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் கவுரவப்படுத்துகிறது. இது இந்திய - இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், ஆழமான நட்புறவுக்கு செலுத்தும் மரியாதையாகும்.சிலி அதிபருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
April 01st, 12:31 pm
அதிபர் போரிக் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவுடனான அவரது வலுவான நட்புறவு மற்றும் நமது உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே வியக்கத்தக்கது. இதற்காக, நான் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரையும், அவரது மதிப்புமிக்க குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறேன்.இந்தியா-நியூசிலாந்து கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்
March 17th, 01:05 pm
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு லக்சன் மற்றும் அவரது குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். பிரதமர் திரு லக்சன் இந்தியாவுடன் நீண்டகால உறவைக் கொண்டவர். சில நாட்கள் முன்பாக, ஆக்லாந்தில் ஹோலிப் பண்டிகையை அவர் எப்படிக் கொண்டாடினார் என்பதை நாம் அனைவரும் கண்கூடாகக் கண்டோம். நியூசிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் மீது பிரதமர் திரு லக்சன் கொண்டுள்ள அன்பை அவருடன் ஒரு பெரிய சமூக தூதுக்குழு இந்தியாவுக்கு வந்திருப்பதிலிருந்தும் அறியலாம். அவரைப் போன்ற இளமையான, ஆற்றல் வாய்ந்த மற்றும் திறமையான தலைவர் இந்த ஆண்டு ரைசினா உரையாடலின் சிறப்பு விருந்தினராக இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.மொரீஷியஸ் பிரதமர் அளித்த இரவு விருந்தில் பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 06:15 am
முதலாவதாக, பிரதமரின் உணர்ச்சிகரமான மற்றும் ஊக்கமளிக்கும் எண்ணங்களுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரமாண்டமான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக மொரீஷியஸ் பிரதமருக்கும், அரசு மற்றும் அதன் மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மொரீஷியஸ் பயணம் என்பது ஒரு இந்தியப் பிரதமருக்கு எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது வெறும் ராஜாங்க ரீதியான பயணம் மட்டுமல்ல, குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. மொரீஷியஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்தே இந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் சொந்தம் என்ற உணர்வு உள்ளது. நெறிமுறைகளின் தடைகள் இல்லை. மொரீஷியஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக நான் மீண்டும் அழைக்கப்பட்டிருப்பது பெருமைக்குரியது. இந்தத் தருணத்தில், 140 கோடி இந்தியர்களின் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.இந்தியா பற்றிய இந்த வாரம் உலகம்
March 11th, 04:47 pm
வர்த்தகம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார ஈடுபாடு உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களுடன், இந்த வாரம் உலகளாவிய உரையாடல்களின் மையமாக இந்தியா உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்திற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் இருந்து அதன் AI லட்சியங்களை விரிவுபடுத்துவது வரை, இந்தியாவின் முன்னேற்ற வேகம் பல துறைகளில் தெளிவாகத் தெரிகிறது.