சோம்நாத்தில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் கண்டுகளித்தார்
May 11th, 04:13 pm
சோம்நாத் அம்ருத் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் சூரியக்கிரண் குழுவின் மெய்சிலிர்க்கும் சாசக நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டுகளித்தார்.Joint Statement on Enhanced Comprehensive Strategic Partnership between the Republic of India and the Socialist Republic of Vietnam
May 06th, 05:24 pm
At the invitation of Prime Minister of India, H.E. Shri Narendra Modi, the General Secretary of Central Committee of Communist Party of Viet Nam, President of the Socialist Republic of Viet Nam, H.E. Mr. To Lam, paid a State Visit to India from 05 May to 07 May 2026. General Secretary, President H.E. Mr. To Lam was accompanied by a high-level delegation. A strong business delegation also accompanied the dignitary.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
April 26th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.Cabinet approves major expansion of Civil Enclave at Srinagar International Airport
February 24th, 04:21 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the development of the Civil Enclave at Srinagar International Airport at an estimated cost of Rs. 1,677 crore. The state-of-the-art new terminal will reflect a harmonious blend of modern design and the rich cultural heritage of Kashmir. The project is expected to significantly boost tourism and economic growth in the region.Prime Minister shares glimpses from Beating Retreat 2026
January 29th, 04:46 pm
PM Modi shared glimpses from the Beating Retreat 2026 today, saying that the performances by various performers were memorable. In a series of posts on X, the PM praised the performers for their discipline, harmony and the patriotic spirit they brought to the historic ceremony.படங்களில்: புது தில்லியின் கர்தவ்ய பாதையில் 77வது குடியரசு தினம்
January 26th, 08:12 am
கர்தவ்ய பாதையில் நடைபெற்ற 77வது குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தின. பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நாளைத் தொடங்கி, துணிச்சலானவர்களுக்கு நாட்டின் நன்றியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்
October 21st, 09:30 am
இந்தியக் கடற்படையினருடன் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தாம் கலந்து கொண்ட தீபாவளிக் கொண்டாட்டங்களின் சிறப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்நாள் சிறப்புமிக்க நாள் என்றும், சிறப்புமிக்க தருணம் என்றும், சிறப்புமிக்க பார்வையுடையது என்றும் குறிப்பிட்ட திரு மோடி, ஒரு புறம் பரந்த அளவிலான கடலும் மற்றொரு புறம் இந்தியத் தாயின் துணிச்சல்மிக்க வீரர்களின் மகத்துவமான வலிமையும் இருப்பதாக சுட்டிக்காட்டினார். கடலில் எழும் சூரியக் கதிர்கள், தீபாவளி பண்டிகையின் போது, துணிச்சல் மிக்க வீரர்கள் ஏற்றிய புனிதமிக்க ஒளிவிளக்குகளைப் போன்று காணப்படுவதாக குறிப்பிட்டார்.The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant
October 20th, 10:30 am
In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்
October 20th, 10:00 am
ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து
October 08th, 09:58 am
விமானப்படை தினத்தையொட்டி துணிச்சல்மிக்க அனைத்து விமானப்படை வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சுபான்ஷு சுக்லாவுடனான பிரதமரின் உரையாடல்
August 19th, 09:43 am
நீங்கள் அனைவரும் சிறப்பான பயணத்தை நிறைவு செய்து திரும்பியுள்ளீர்கள்…விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் கலந்துரையாடினார்
August 19th, 09:42 am
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று புதுதில்லியில் கலந்துரையாடினார். விண்வெளி பயணத்தின் வித்தியாசமான அனுபவம் ஒருவருக்கு மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் விண்வெளி வீரர்கள் இந்த மாற்றத்தை எவ்வாறு உணர்கிறார்கள், அனுபவம் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமருக்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளி சூழல் மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்றும், இதற்கு முக்கிய காரணம் ஈர்ப்புவிசை இல்லாததுதான் என்றும் கூறினார்.பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்திய வருகையால் ஏற்பட்டுள்ள பலன்கள்
August 05th, 04:31 pm
இந்தியா – பிலிப்பைன்ஸ் இடையே உத்திசார் கூட்டாண்மையை ஏற்படுத்துவது குறித்த பிரகடனம்.ஆதம்பூர் விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப் படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் ஆற்றிய உரை
May 13th, 03:45 pm
இந்த முழக்கத்தின் சக்தியை உலகம் தற்போதுதான் கண்டிருக்கிறது. பாரத் மாதா கி ஜெய் என்பது வெறும் முழக்கம் அல்ல, பாரத தாயின் கௌரவம் மற்றும் கண்ணியத்திற்காக தமது உயிரைப் பணயம் வைக்கும் நாட்டின் ஒவ்வொரு ராணுவ வீரரின் சபதமாகும். நாட்டிற்காக வாழ விரும்பும், ஏதாவது சாதிக்க விரும்பும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் குரல் இது. நமது ட்ரோன்கள் எதிரியின் கோட்டையின் சுவர்களை அழிக்கும்போது, நமது ஏவுகணைகள் ஒரு சத்தத்துடன் இலக்கை அடையும்போது, எதிரி கேட்கிறான் - பாரத் மாதா கி ஜெய்! நமது படைகள் அணு ஆயுத அச்சுறுத்தலை முறியடிக்கும் போது, வானத்திலிருந்து உலகம் வரைக்கும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே எதிரொலிக்கிறது - பாரத் மாதா கி ஜெய்!பிரதமர் திரு நரேந்திர மோடி துணிச்சல்மிக்க விமானப்படைப் போர் வீரர்கள் மற்றும் இராணுவ வீரர்களுடன் ஆதம்பூரில் விமானப் படை நிலையத்தில் உரையாடினார்.
May 13th, 03:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் துணிச்சல்மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தார். அவர்களிடம் உரையாற்றிய அவர், 'பாரத் மாதா கி ஜெய்' என்ற முழக்கத்தின் சக்தியை எடுத்துரைத்தார், உலகம் அதன் வலிமையைக் கண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். இது வெறும் முழக்கம் மட்டுமல்ல, பாரதத் தாயின் கண்ணியத்தை நிலைநிறுத்த தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொரு வீரரும் எடுக்கும் ஒரு புனிதமான உறுதிமொழி என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த முழக்கம் நாட்டிற்காக வாழவும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் விரும்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலாகும் என்று மேலும் கூறினார். போர்க்களத்திலும் முக்கியமான பணிகளிலும் 'பாரத் மாதா கி ஜெய்' எதிரொலிக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய வீரர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கமிடும்போது, அது எதிரியின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ராணுவ வலிமையை அவர் விரிவாக எடுத்துரைத்தார். இந்திய ட்ரோன்கள் எதிரிகளின் கோட்டைகளை தாக்கும் போது, ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கும் போது, எதிரி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற ஒரே ஒரு சொற்றொடரை மட்டுமே கேட்கிறார் என்று கூறினார். இருண்ட இரவுகளிலும் கூட, எதிரிகள் நம் நாட்டின் வெல்ல முடியாத உணர்வைக் காணும்படி கட்டாயப்படுத்தும் வகையில், வானத்தை ஒளிரச் செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அணு ஆயுத அச்சுறுத்தல்களை இந்தியப் படைகள் தகர்த்தெறியும்போது, 'பாரத் மாதா கி ஜெய்' என்ற செய்தி வானத்திலும் எதிரொலிக்கிறது என்று கூறினார்.பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் தமிழாக்கம்
May 12th, 08:48 pm
நாம் அனைவரும் கடந்த சில தினங்களில் நாட்டின் வலிமையையும் அதன் பொறுமையையும் பார்த்தோம். நான் முதலில் பாரதத்தின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய சேனைகளுக்கும் நமது உளவுத்துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் வணக்கம் செலுத்த விரும்புகிறேன். நம்முடைய துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்கள் ‘ஆபரேஷன் சிந்தூரின்’ இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்திற்கும், துணிச்சலுக்கும், பராக்கிரமத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன்.பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்
May 12th, 08:00 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், சமீபத்திய நாட்களில் இந்தியாவின் வலிமை மற்றும் நிதானத்தை இந்த நாடு கண்டுள்ளது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு இந்திய குடிமகனின் சார்பாகவும் நாட்டின் வலிமைமிக்க ஆயுதப்படைகள், உளவுத்துறை அமைப்புகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அவர் தனது வணக்கத்தைத் தெரிவித்தார். இந்தியாவின் துணிச்சலான வீரர்கள், ஆப்பரேஷன் சிந்தூரின் நோக்கங்களை அடைவதில் காட்டிய அசைக்க முடியாத துணிச்சலை பிரதமர் எடுத்துரைத்தார், அவர்களின் வீரம், மீள்தன்மை மற்றும் வெல்ல முடியாத மனப்பான்மையைப் பாராட்டினார். இந்த இணையற்ற துணிச்சலை நாட்டின் ஒவ்வொரு தாய், சகோதரி மற்றும் மகளுக்கும் அர்ப்பணித்தார்.சுதந்திரப் போராட்ட வீரர்களை தனித்துவ முறையில் கௌரவிக்கும் வகையில் அமைந்த ஆயுதப்படையினரின் படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் சிறப்பான தருணங்கள்: பிரதமர்
January 30th, 07:00 pm
நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தனித்துவமான முறையில் கௌரவிக்கும் வகையில் ஆயுதப்படையினரின் படைவீரர்கள் பாசறை திரும்பும் விழாவில் சிறப்பு தருணங்களை எடுத்துக்காட்டும் வீடியோ பதிவு ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
January 29th, 10:35 pm
படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
October 28th, 04:00 pm
குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,