இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் திரு மோடி சந்திப்பு

July 24th, 07:38 pm

வரலாற்று சிறப்புமிக்க இந்திய - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ] கையெழுத்தானதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு. சர். கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகத் தலைவர்களைச் சந்தித்தனர். சுகாதாரம், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனங்கள், எரிசக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், ஐடி, தளவாடங்கள், ஜவுளி மற்றும் நிதிச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பிலிருந்தும் முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தத் துறைகள் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035

July 24th, 07:12 pm

இந்தியா மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், ஜூலை 24, 2025 அன்று லண்டனில் நடந்த சந்திப்பின் போது, புதிய இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035-ஐ அங்கீகரித்தனர். இது புத்துயிர் பெற்ற கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சிய மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒப்பந்தம், பரஸ்பர வளர்ச்சி, செழிப்பு மற்றும் விரைவான உலகளாவிய மாற்றத்தின் போது ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தை வடிவமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை

July 24th, 04:20 pm

முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமரின் கருத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு

July 24th, 04:00 pm

இந்த அன்பான வரவேற்புக்கும், மகத்தான கௌரவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்று செக்கர்ஸில், நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கப் போகிறோம். நமது பகிரப்பட்ட பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றிணைகின்றன.

இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு மோடி சந்திப்பு

July 24th, 03:59 pm

ஜூலை 23-24, 2025 அன்று இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். பக்கிங்ஹாம்ஷையரின் செக்கர்ஸில் உள்ள இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வந்த அவரை, பிரதமர் திரு ஸ்டார்மர் அன்புடன் வரவேற்றார். இரு தலைவர்களும் நேரடி சந்திப்பையும், பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர்.

PM Modi arrives in London, United Kingdom

July 24th, 12:15 pm

Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.

பிரதமரின் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு வருகை (ஜூலை 23 – 26, 2025)

July 20th, 10:49 pm

பிரதமர் மோடி ஜூலை 23 – 26 வரை இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தையும், மாலத்தீவுகளுக்கு அரசு முறைப் பயணத்தையும் மேற்கொள்வார். பிரதமர் ஸ்டார்மருடன் அவர் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார், மேலும் அவர்கள் CSP-யின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்வார்கள். ஜூலை 26 அன்று மாலத்தீவுகளின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி 'கௌரவ விருந்தினராக' கலந்து கொள்வார். அவர் மாலத்தீவு அதிபர் முய்சுவைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துவார்.