பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் டொபாகோ பிரதமருடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார்
July 04th, 11:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள ரெட் ஹவுஸில் டிரினிடாட் & டொபாகோ குடியரசின் பிரதமர் திருமதி கமலா பெர்சாத்-பிஸ்ஸரை சந்தித்தார். சமீபத்திய தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸருக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார். தமக்கு அளிக்கப்பட்ட சிறந்த வரவேற்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.