பிரதமர், சுவீடன் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்
May 18th, 12:10 am
சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் பிரதமர் திரு நரேந்திர மோடி சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சனுடன் இருதரப்பு ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் சுவீடன் பட்டத்து இளவரசி கலந்துகொண்டு 16-வது மன்னர் குஸ்டாஃப் மற்றும் அரசி சில்வியா ஆகியோரின் வாழ்த்துகளை தெரிவித்தார். பிரதமர் திரு மோடி மன்னரின் 80-வது பிறந்ததினத்தை ஒட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சுவீடன் நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது!
May 17th, 11:13 pm
சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய மற்றும் பழமையான விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. சுவீடனின் பட்டத்து இளவரசி விக்டோரியா இந்த விருதை பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.