செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

June 28th, 05:00 pm

பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு செஷல்ஸ் நாட்டில், உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

June 28th, 03:07 pm

செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாநுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான Guardian of the Blue Horizon என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று (28.06.2026) வழங்கி கௌரவித்தார். பிரதமரின் பசுமை செயல்பாடுகள், வளரும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், நீலப் பொருளாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், கடல் வளங்களின் நிலையான மேலாண்மை, சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Our vision is to make the Indian Ocean an Ocean of Opportunity: PM Modi at the India-Seychelles Joint Press Meet

June 28th, 02:02 pm

Addressing the India-Seychelles Joint Press Meet, PM Modi dedicated the Guardian of the Blue Horizon honour to all nations fighting climate change. Reaffirming the MAHASAGAR Vision, he said India envisions an Indian Ocean where prosperity grows with maritime security and partnerships are rooted in mutual respect and trust. He also highlighted the Blue Economy as a natural and strategic pillar of the India-Seychelles partnership.

சீஷெல்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

June 27th, 03:30 pm

சீஷெல்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றார். அங்கு பாரம்பரிய நடனம் உள்ளிட்ட சிறப்பான கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயணம், இந்தியா மற்றும் சீஷெல்ஸ் இடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவை முன்னிலைப்படுத்துகிறது. இப்பயணத்தின்போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை மேலும் மேம்படுத்துவது குறித்து சீஷெல்ஸ் நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.