சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போதுவெளியிடப்பட்ட கூட்டறிக்கை
April 23rd, 12:44 pm
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியல்
April 23rd, 02:25 am
இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இருநாடுகளைச் சேர்ந்த துணைக் குழுக்கள் மற்றும் பணிக்குழுக்களின் பணிகள் குறித்தும் இந்தக் குழுமம் மதிப்பாய்வு செய்தது. கூட்டத்தின் இறுதியில், மேற்கொள்ளப்பட்ட குறிப்புகளில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.பிரதமர் திரு நரேந்திர மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்தார் - இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு பங்காண்மைக் கவுன்சில் கூட்டத்திற்கு கூட்டாக தலைமை வகித்தார்
April 23rd, 02:20 am
பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 ஏப்ரல் 22, அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஜெட்டாவில் உள்ள அரசு மாளிகையில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றார்.சவூதி அரேபியா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
April 22nd, 08:30 am
பட்டத்து இளவரசரும், பிரதமருமான மேதகு இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நான் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்கிறேன்.பிரதமர் மோடி ஏப்ரல் 22-23, 2025 இல் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
April 19th, 01:55 pm
மேன்மை தங்கிய இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த வருகை நமது பன்முக கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும், பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.