பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வே பிரதமருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்
May 18th, 08:21 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.05.2026) ஓஸ்லோவில் நார்வே பிரதமர் திரு ஜோனாஸ் கார் ஸ்டோரே-யுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும் நார்வே-வுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளின் அடையாளமாக, இன்று காலை ஓஸ்லோ விமான நிலையத்திற்கு அவர் சென்றடைந்தபோது, நார்வே பிரதமர் ஸ்டோரே நேரடியாக வந்து அவரை அன்புடன் வரவேற்றார்.நார்வேயின் மதிப்பிற்குரிய மன்னர் ஐந்தாம் ஹரால்டு உடன் பிரதமர் சந்திப்பு
May 18th, 07:36 pm
ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில் நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்டை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.நார்வே நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
May 18th, 07:35 pm
ஆஸ்லோவில் நடைபெற்ற ஒரு விழாவில், நார்வேயின் மேன்மை பொருந்திய மன்னர் ஐந்தாம் ஹரால்ட், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ராயல் நார்வேயியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருதை வழங்கினார். இந்த விருது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் நார்வேயின் மிக உயர்ந்த கௌரவமாகும். மேலும், நார்வே மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டும் விதமாக இது வழங்கப்படுகிறது.