நைஜீரியாவின் முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
July 14th, 11:45 am
நைஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பல்வேறு தருணங்களில் அந்நாட்டு முன்னாள் அதிபர் முகமது புஹாரியுடன் தாம் மேற்கொண்ட சந்திப்புகள், பேச்சுவார்த்தைகளை திரு. மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்தியா-நைஜீரியா நாடுகள் இடையே நட்புறவு மேம்பட்டதில் மறைந்த முஹமது புஹாரியின் ஞானம், அரவணைப்பு மற்றும் உறுதியான அர்ப்பணிப்புணர்வு போன்ற பண்புகள் தனித்துவமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினர், அந்நாட்டு மக்கள், அரசிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் 140 கோடி இந்தியர்களுடன் தாமும் இணைந்து கொள்வதாக திரு. மோடி தெரிவித்துள்ளார்.