மலேசியாவில் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
February 08th, 02:50 pm
மலேசியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) கலந்துரையாடினார். பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டான் தெங்கு முகமது தௌஃபிக், பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுனவத்தின் நிறுவனர் டான் டத்தோ வின்சென்ட் டான் சீ யியோன், கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபைசல் வான் ஜாஹிர், ஃபிசன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் டத்தோ புவா கெய்ன் செங் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசியாவின் கோலாலம்பூருக்கு அதிகாரப்பூர்வ வருகை
February 04th, 04:17 pm
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி பிப்ரவரி 7–8, 2026 வரை மலேசியாவுக்கு வருகை தருவார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மலேசியப் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்வார். அவர் இந்திய சமூக உறுப்பினர்கள், தொழில்துறை மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் மற்றும் 10வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பங்கேற்பார்.