கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்
October 15th, 02:41 pm
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். “கென்யாவின் முன்னாள் பிரதமரும் எனது நெருங்கிய நண்பருமான ரெய்லா ஒடிங்காவின் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. இந்தியா – கென்யா இடையேயான நட்புறவுக்கு காரணமாக அவர் திகழ்ந்தார். குஜராத் முதலமைச்சராக பொறுப்பு வகித்த நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களது இந்த நட்பு பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது” என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியா மீது சிறப்பான அன்பை அவர் கொண்டிருந்தார் என்றும் நமது நாட்டின் கலாச்சார மாண்புகள், தொன்மையான ஞானம் ஆகியவற்றின் மீது ஈர்ப்புக் கொண்டவர் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர் மேற்கொண்ட முயற்சிகளில் இது பிரதிபலித்தது என்றும் தெரிவித்துள்ளார்.