List of Outcomes: Prime Minister of Japan’s visit to India for the 16th India-Japan Annual Summit
July 02nd, 10:39 pm
The 16th India-Japan Annual Summit concluded with a comprehensive set of outcomes, including a Joint Declaration on Economic Security, Joint Statements on Artificial Intelligence and Energy Resilience, and 13 other agreements across clean energy, mobility, healthcare, critical minerals, AI, biotechnology, digital infrastructure and financial cooperation, further strengthening the India–Japan Special Strategic and Global Partnership.16th India-Japan Annual Summit Joint Statement
July 02nd, 10:22 pm
At the 16th India–Japan Annual Summit, PM Modi and Japanese Prime Minister Sanae Takaichi reaffirmed their commitment to advancing the India–Japan Special Strategic and Global Partnership through deeper cooperation in defence, economic security, clean energy, AI, technology, investment and people-to-people ties. The Joint Statement also sets the stage for celebrating the 75th anniversary of India–Japan diplomatic relations next year.ஜப்பானியப் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
July 02nd, 01:30 pm
அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்லாமல், தொலைநோக்குப் பார்வை கொண்ட மற்றும் பரவலாக மதிக்கப்படும் ஒரு தலைவரும் ஆவார். மேலும், அவர் ஜப்பானின் நாரா மாகாணத்தைச் சேர்ந்தவர். இந்த நாரா மாகாணம், இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியத்தின் முக்கியமான மையமாகத் திகழ்கிறது.Prime Minister meets the Prime Minister of Japan on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg
November 23rd, 09:46 pm
PM Modi held a bilateral meeting with the PM of Japan, Sanae Takaichi on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg, South Africa. The leaders underscored their commitment to deepening the India-Japan partnership for regional and global peace, prosperity and stability. PM Takaichi expressed strong support for the AI Summit to be hosted by India in February 2026.15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சி மாநாடு கூட்டறிக்கை: நமது அடுத்த தலைமுறையின் பாதுகாப்பு மற்றும் வளத்துக்கான கூட்டாண்மை
August 29th, 07:06 pm
ஜப்பான் பிரதமர் திரு இஷிபா ஷிகெரு அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்தர உச்சிமாநாட்டிற்காக 2025, ஆகஸ்ட் 29-30 தேதிகளில் ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். 2025, ஆகஸ்ட் 29 அன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் (கான்டெய்) பிரதமர் மோடியை பிரதமர் இஷிபா வரவேற்றார். அங்கு அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு பிரதமர்களும் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாகரிக உறவுகள், பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் ஆர்வங்கள், பொதுவான உத்திசார் கண்ணோட்டம் ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியா- ஜப்பான் இடையேயான நீண்டகால நட்பை அவர்கள் நினைவு கூர்ந்தனர். கடந்த தசாப்தத்தில் இந்தியா-ஜப்பான் கூட்டாண்மை அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இரு பிரதமர்களும் பாராட்டினர். மேலும் வரும் தசாப்தங்களில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் வளத்தை அடைவதற்கான உத்தி மற்றும் எதிர்கால கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆக்கபூர்வக் கலந்துரையாடலை நடத்தினர்.இந்தியா - ஜப்பான் மனிதவள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம்
August 29th, 06:54 pm
2025-ம் ஆண்டு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின் போது, இந்திய - ஜப்பான் பிரதமர்கள் தேசிய முன்னுரிமைகளை பூர்த்தி செய்வதை ஒப்புக்கொண்டனர்.பிரதமர் மோடி ஜப்பானின் டோக்கியோவிற்கு வருகை தருகிறார்
August 29th, 06:43 am
பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரத்திற்கு முன்பு ஜப்பானுக்கு வருகை தந்தார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிரதமர் மோடியும் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபாவும் இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மதிப்பாய்வு செய்து, முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பார்கள்.பிரதமரின் ஜப்பான் மற்றும் சீனா பயணம்
August 22nd, 06:15 pm
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஆகஸ்ட் 29–30, 2025 வரை ஜப்பானுக்கும், ஆகஸ்ட் 31–1, 2025 வரை சீனாவுக்கும் பயணம் மேற்கொள்வார். ஜப்பானில், பிரதமர் 15வது இந்தியா–ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்று, ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் கலந்துரையாடுவார். சீனாவில், பிரதமர் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.ஜப்பான் பிரதமருடனான கூட்டுப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் பத்திரிகை செய்தி
March 20th, 12:30 pm
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் திரு கிஷிடா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். பிரதமர் திரு கிஷிடாவும், நானும் கடந்த ஓராண்டில் பலமுறை சந்தித்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இந்தியா- ஜப்பான் நட்புறவையொட்டிய அவரது நேர்மறையான உறுதித்தன்மையை நான் உணர்ந்துள்ளேன். அதனால் அவருடைய வருகை இன்று நமது ஒத்துழைப்பு தருணத்தை பராமரிக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.ஜப்பான் பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
May 22nd, 12:16 pm
ஜப்பான் பிரதமர் திரு. பியூமியோ கிஷிடா அழைப்பின் பேரில் மே 23-24 ஆகிய தேதிகளில் நான் ஜப்பானின் டோக்கியோவுக்குச் செல்கிறேன்.இந்தியா-ஜப்பான் இடையேயான 14 ஆவது வருடாந்திர உச்சிமாநாடு (19 மார்ச் 2022; புதுதில்லி)
March 17th, 08:29 pm
இந்தியா-ஜப்பான் இடையேயான 14 ஆவது வருடாந்தர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் திரு கிஷிடா ஃபூமியோ 2022, மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் புதுதில்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த உச்சிமாநாடு இருதலைவர்களுக்கு இடையேயான முதலாவது சந்திப்பாகும்.ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு
January 07th, 09:39 pm
ஜப்பான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. டரோ கோனோ பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (07.01.2019) சந்தித்துப் பேசினார்.இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்
September 14th, 05:04 pm
இந்தியா-ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய-ஜப்பான் கூட்டாளித்துவம் குறித்த பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்தார். “இந்தியாவில் செயலாற்றல் மிக்க திறமையான கைகள் மிக அதிகம் இருப்பதால், ஜப்பான் பெரிதும் பலனடைய முடியும்” எனவும் அவர் கூறினார். 21ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்கானது என்றும் ஆசியா உலகளாவிய வளர்ச்சியின் புதிய மையமாக உருவாகியுள்ளது எனவும் திரு.மோடி குறிப்பிட்டார்.