சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
June 16th, 03:15 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.