இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்

June 16th, 03:20 pm

சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்தப் பயணம் ஒரு பகிரப்பட்ட வரலாற்றை மட்டுமல்ல, கூட்டாகத் திட்டமிடப்பட்ட தொலைநோக்குப் பார்வை, பரஸ்பர நம்பிக்கை, ஒரு எதிர்கால கூட்டாண்மை ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.

சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

June 16th, 03:15 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைப்ரஸ் அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

June 16th, 01:45 pm

முதலில், அன்பான வரவேற்பு மற்றும் அன்பான விருந்தோம்பலுக்காக மாண்புமிகு அதிபர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று நான் சைப்ரஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்த தருணத்திலிருந்து, சைப்ரஸ் அதிபரும் இந்த நாட்டு மக்களும் காட்டிய அரவணைப்பும் பாசமும் உண்மையிலேயே என் இதயத்தைத் தொட்டுள்ளன.

சைப்ரஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III’ விருதை ஏற்றுக்கொள்ளும் போது பிரதமர் ஆற்றிய ஏற்புரையின் தமிழாக்கம்

June 16th, 01:35 pm

கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாக்காரியோஸ் III” விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசிற்கும் மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமருக்கு மகாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது

June 16th, 01:33 pm

சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருதை வழங்கினார்.