விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பிற்கு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான செயல்திட்டம்
July 10th, 10:07 am
சமூகங்களை ஒருங்கிணைக்கவும், ஒத்துழைப்புக்கு புதிய பாதைகளை திறக்கவும் விளையாட்டுகள் என்பவை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே சக்திமிக்க பாலமாக விளங்குகின்றன.விளையாட்டு நிகழ்வைக் காண மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் சென்றிருந்தார்
July 10th, 08:21 am
இந்தியா – ஆஸ்திரேலியா விளையாட்டு உறவுகளைக் கொண்டாடும் நிகழ்வை காண்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸ், விக்டோரியா முதல்வர் ஜசிந்தா ஆலன் ஆகியோருடன் இணைந்து இன்று மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வில், திரு ஸ்டீவ் வா, லிசா ஸ்தலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய விளையாட்டு ஆளுமைகள் பலர் பங்கேற்றனர். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான உத்திசார் கூட்டாண்மையின் தூண்களாக விளங்கும் விளையாட்டுகள், கலாச்சார பரிமாற்றங்கள், மக்களிடையேயான உறவு ஆகியவற்றில் அதிகரிக்கும் முக்கியவத்துவத்தை இந்தப் பயணம் குறிப்பிடுகிறது.The Indo-Pacific represents the shared aspirations of like-minded democracies such as India and Australia: PM Modi at the Joint Press Meet
July 09th, 11:15 am
Addressing a joint press meet with Australian Prime Minister Anthony Albanese, PM Modi highlighted the expanding India-Australia Comprehensive Strategic Partnership. He also likened the India-Australia partnership to cricket, saying the agenda is One-Day focused, decisions are as fast as T20 and the partnership is as long and deep as a Test match.India-Australia Joint Statement on Energy Security
July 09th, 11:02 am
The India-Australia Joint Statement on Energy Security noted the two countries' deep concern over the situation in the Middle East. They shared their commitment to working together to strengthen energy supply chain resilience, including by deepening regional cooperation, accelerating the energy transition, promoting the uptake of renewable energy resources and upholding open trade arrangements for energy and liquid fuels.Third India-Australia Annual Summit Joint Statement
July 09th, 10:58 am
At the invitation of Australian PM Anthony Albanese, PM Modi visited Australia from 8-10 July 2026 for the Third Australia-India Annual Summit in Melbourne. The two leaders reaffirmed their shared commitment to further consolidate and expand the India-Australia Comprehensive Strategic Partnership (CSP) and explore new areas of cooperation for the peace, prosperity and stability of the shared region.இந்தியா – ஆஸ்திரேலியா இடையே ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கூட்டுத் தீர்மானம்
July 09th, 10:55 am
இந்தியா, ஆஸ்திரேலியா பிரதமர்களாகிய நாங்கள் எங்களுடைய நெருக்கமான இருதரப்பு உறவுகளால் ஒருங்கிணைந்து நமது நாடுகளின் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதிலும் வெளிப்படையான, அமைதியான, நிலையான, வளமையான இந்தோ – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான நோக்கத்துடனும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த இந்தக் கூட்டுத் தீர்மானத்திற்கு எங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்கிறோம்.இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பிரதமர் பயணம்
July 03rd, 08:42 pm
இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகவும், மே 2018-ல் இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகவும் அமையும். இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்வார். ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றுவார். இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான மக்கள் இடையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சிறப்பான பிணைப்புகளைப் போற்றும் வகையில், இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.பிரதமருடன் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங் சந்திப்பு
May 26th, 08:19 pm
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை சந்தித்ததில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது பதவிக் காலத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்
May 06th, 02:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திரு அந்தோணி அல்பானீஸுடன் தொலைபேசி மூலம் உரையாடி ஆஸ்திரேலியாவின் 32-வது பிரதமராக வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்திய-ஆஸ்திரேலிய 2-வது வருடாந்திர உச்சிமாநாடு
November 19th, 11:22 pm
இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மாண்புமிகு திரு அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் நவம்பர் 19, 2024 அன்று ரியோ டி ஜெனிரோவில் ஜி20 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய-ஆஸ்திரேலிய இரண்டாவது வருடாந்திர உச்சிமாநாட்டை நடத்தினர்.ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 26th, 01:02 pm
ஆஸ்திரேலிய பிரதமர் திரு அந்தோணி அல்பனீஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். குவாட் அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புகளில் இருதரப்பு உறவுகளிலும் ஒத்துழைப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.ஆஸ்திரேலிய பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை தொடர்பான செய்திக்குறிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு
May 24th, 06:41 am
எனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது எனக்கும், எனது குழுவினருக்கும், அளிக்கப்பட்ட விருந்தோம்பல் மற்றும் மரியாதைக்காக ஆஸ்திரேலிய மக்களுக்கும், பிரதமர் அல்பனீஸ் அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர், ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் இந்தியாவிற்கு வந்த இரண்டு மாதங்களில் நான் ஆஸ்திரேலியாவிற்கு வந்திருக்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் இது எங்களின் ஆறாவது சந்திப்பாகும்.