2026 பிப்ரவரி 19 அன்று இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு 2026- ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
February 18th, 03:55 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 பிப்ரவரி 19-ம் தேதி புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாடு 2026-ஐ பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். அதற்கு முன்னதாக, பிப்ரவரி 18-ம் தேதி மாலை சுமார் 7 மணிக்கு, பாரத மண்டபத்தில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் வரவேற்கிறார். இதற்கிடையே, உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர்
February 16th, 08:47 pm
புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.