பிரதமர் திரு நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது வெளியிடப்பட்ட இந்தியா-நெதர்லாந்து கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:45 am

நெதர்லாந்து பிரதமர் திரு ராப் ஜெட்டனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மே 16, 17 ஆகிய தேதிகளில் நெதர்லாந்திற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இரண்டாவது நெதர்லாந்துப் பயணமாகும்.

இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம் 2026-2030-ன் முக்கிய அம்சங்கள்

May 17th, 03:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடியும், நெதர்லாந்துப் பிரதமர் திரு ராப் ஜெட்டனும், 2026 மே 16 அன்று ஹேக்கில் நடைபெற்ற சந்திப்பின்போது, காலவரையறைக்குட்பட்ட முன்முயற்சிகள், கூட்டுச் செயல் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா-நெதர்லாந்து இருதரப்பு உறவை ஒரு உத்திசார் ஒத்துழைப்பு நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, இந்தியாவும் நெதர்லாந்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2026-2030) இந்தியா-நெதர்லாந்து உத்திசார் ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டன.

பின்லாந்து அதிபரின் அரசுமுறைப் பயணம் குறித்த இந்திய – பின்லாந்து கூட்டறிக்கை

March 05th, 08:03 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பின்லாந்து அதிபர் டாக்டர் அலெக்சாண்டர் ஸ்டப், 2026 மார்ச் 4-7 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பின்லாந்தின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் திருமிகு சாரி முல்தாலா, வேலைவாய்ப்பு அமைச்சர் திரு மத்தியாஸ் மார்டினென் மற்றும் அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் அவருடன் வந்துள்ளது.

மலேசியப் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்

February 08th, 11:19 am

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.

செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் தலைமை செயலதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் திரு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

January 29th, 06:33 pm

செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் தலைமை செயலதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று உரையாடினார்.

மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்

September 11th, 02:10 pm

அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

மொரீஷியஸ் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

September 11th, 12:30 pm

எனது மக்களவைத் தொகுதிக்கு உங்களை வரவேற்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். காசி என்பது எப்போதும் இந்திய நாகரீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.