கூட்டுறவு நிறுவனங்களுக்கான உலகளாவிய தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அமுல் மற்றும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு அமைப்புக்கு பிரதமர் வாழ்த்து
November 05th, 10:41 pm
கூட்டுறவு நிறுவனங்களுக்கான உலகளாவிய தரவரிசையில் முதலாவது மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ள அமுல் மற்றும் இந்திய விவசாயிகள் உரக்கூட்டுறவு அமைப்புக்கு (ஐஎஃப்எஃப்சிஓ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கூட்டுறவுத்துறை துடிப்புமிக்கது என்றும், பலரது வாழ்க்கை தரத்தை மாற்றியமைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் காலங்களில் இத்துறையை மேலும் ஊக்குவிக்க தங்கள் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ பிரதமர், நவம்பர் 25 அன்று தொடங்கி வைக்கிறார்
November 24th, 05:54 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி சர்வதேச கூட்டுறவுக் கூட்டணியின் (ஐசிஏ) உலகளாவிய கூட்டுறவு மாநாடு 2024-ஐ தொடங்கி வைப்பதுடன் ஐநா சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ நவம்பர் 25 அன்று பிற்பகல் 3 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கி வைக்கிறார்.