ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
November 23rd, 12:45 pm
ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.ஜொகன்னஸ்பர்கில் நடைபெற்ற ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார்
November 23rd, 12:30 pm
இந்தக் கூட்டம் சரியான நேரத்தில் நடைபெறுவதாக கூறிய பிரதமர், ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற முதல் ஜி20 உச்சிமாநாட்டுடன் சேர்ந்து இது நடைபெற்றுள்ளதாக அவர் கூறினார். வளரும் நாடுகள் (உலகளாவிய தெற்கு நாடுகள்) தொடர்ச்சியாக நான்கு முறை ஜி20 தலைமைத்துவ பொறுப்பை வகித்து வருவதை அவர் குறிப்பிட்டார். அதில் மூன்று கடைசி மூன்று முறை ஐபிஎஸ்ஏ உறுப்பு நாடுகள் ஜி20 தலைமைத்துவத்தை ஏற்று நடத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, மனிதநேய மேம்பாடு, பலதரப்பு சீர்திருத்தம், நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல முக்கிய முயற்சிகள் உருவாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி
November 21st, 06:25 pm
சிறிது நேரத்திற்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வந்தடைந்தார் பிரதமர் மோடி. 20வது ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார். உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார், மேலும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா (ஐபிஎஸ்ஏ) தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்பார்.தென்னாப்பிரிக்கா பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
November 21st, 06:45 am
தென்னாப்பிரிக்காவின் தலைமையின் கீழ், ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் இருபதாவது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, திரு. சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், நவம்பர் 21 முதல் 23 வரை தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறேன்.