பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
July 11th, 08:09 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.07.2026) ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகையில் நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனை சந்தித்தார். அரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, பாரம்பரிய மாவோரி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில், அமைதி, மரியாதை, வரவேற்பு ஆகியவற்றைக் குறிக்கும் மாவோரி சடங்குகள் இடம்பெற்றன. பாரம்பரிய வரவேற்பைத் தொடர்ந்து, பிரதமர் அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.இந்தியா - நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பு 2030-ம் ஆண்டுக்கான செயல் திட்டம்
July 11th, 08:06 am
இந்திய, நியூசிலாந்து பிரதமர்கள் 11 ஜூலை 2026 அன்று நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சந்தித்து, இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதாக அறிவித்தனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கூட்டு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுவதற்கும், இந்தியா-நியூசிலாந்து உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பகிரப்பட்ட கட்டமைப்பாக, 2030-ம் ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர். இந்த உத்திசார் ஒத்துழைப்பானது, இந்த செயல்திட்டத்தின் பின்வரும் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், முன்முயற்சிகளை உள்ளடக்கியது.நியூசிலாந்தில், பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின் பலன்கள்
July 11th, 08:03 am
இந்தியா - நியூசிலாந்து இடையே, கடல்சார் பாதுகாப்பு உட்பட பாதுகாப்புத் துறையில், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள், ஒருங்கிணைப்பு, தகவல் பரிமாற்றம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை மேம்படுத்துதல், நீரியல் ஆய்வு, கடல்சார் செயல்திட்டத் தயாரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது என இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.இந்தியா-நியூசிலாந்து நாடுகளின் கூட்டறிக்கை
July 11th, 07:59 am
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2026 ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார்.செஷல்ஸ் தேசிய நாடாளுன்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
June 28th, 05:00 pm
பிரதமராக நான் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முதன்முதலில் பயணம் செய்த நாடு, 2015-ல் செஷல்ஸ் ஆகும். பிரதமராக ஆப்பிரிக்காவிற்கு நான் மேற்கொண்ட முதல் பயணமும் அதுவே. இந்தியப் பெருங்கடல் குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் செஷல்ஸ் ஒரு சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்று நான் நம்பியதாலேயே இங்கு வந்தேன். இன்று, ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இங்கு வரும்போது, அந்த நம்பிக்கை முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது.மொரீஷியஸ் பிரதமரின் இந்தியப் பயணத்தின் பலன்கள்
September 11th, 02:10 pm
அரசு முறைப் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் இந்தியா வந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு: