ஐதராபாதில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் சந்தித்தார்

May 10th, 10:07 pm

ஐதராபாதில் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது இல்லத்தில் இன்று (10.05.2026) சந்தித்தார்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் ஒவ்வொரு இந்தியருக்கும் பிரதமர் மோடியின் வேண்டுகோள்

May 10th, 08:39 pm

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, சமீபத்திய மோதல்கள் மற்றும் விநியோகச் சங்கிலி இடையூறுகளால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார சவால்கள் குறித்துப் பேசினார். மேலும், இந்தியாவின் மீள்திறனை வலுப்படுத்த கூட்டு தேசியப் பொறுப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார். இறக்குமதி மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், கார் பகிர்வை ஊக்குவிக்கவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் அவர் குடிமக்களை வலியுறுத்தினார்.

பிரதமர், ஹைதராபாத்தில் சிந்து மருத்துவமனையைத் திறந்து வைத்தார்

May 10th, 07:10 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (10.05.2026) ஹைதராபாத்தில் சிந்து மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.

People are fed up off Congress and BRS' politics of nepotism: PM Modi in Hyderabad

May 10th, 06:05 pm

PM Modi addressed a massive public rally in Hyderabad, Telangana, where he spoke on India’s rising global stature, the significance of BJP’s recent electoral victories and the country’s collective responsibility during ongoing global economic and geopolitical challenges.

PM Modi’s massive rally in Hyderabad focuses on self-reliance and a Viksit Telangana

May 10th, 06:00 pm

PM Modi addressed a massive public rally in Hyderabad, Telangana, where he spoke on India’s rising global stature, the significance of BJP’s recent electoral victories and the country’s collective responsibility during ongoing global economic and geopolitical challenges.

ஐதராபாதில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 10th, 03:45 pm

தெலங்கானா ஆளுநர் திரு. சிவ பிரதாப் சுக்லா அவர்களே, முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ஜி. கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் அவர்களே, எனது நாடாளுமன்றத் தோழர் கொண்ட விஷ்வேஷ்வர் ரெட்டி அவர்களே, தெலங்கானா அரசின் அமைச்சர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!

பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

May 10th, 03:30 pm

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தத் திட்டங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மே 10 அன்று கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்

May 09th, 11:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026-ம் ஆண்டு மே 10-ம் தேதி, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குச் செல்கிறார். காலை 11 மணியளவில், பெங்களுருவில் நடைபெறும் 'வாழும் கலை' அமைப்பின் 45-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் பிரதமர், அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து, பிரதமர் ஹைதராபாத் செல்கிறார். பிற்பகல் 3 மணியளவில், ஹைதராபாத்தில் ரூ 9,400 கோடி மதிப்பிலான, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியில்,அவர் உரையாற்றுகிறார். பிற்பகல் 3:45 மணியளவில், ஹைதராபாத்தில் அமைந்துள்ள 'சிந்து மருத்துவமனையை' பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார்.

When India and Canada stand together, we create an economic force of capital and capability: PM Modi at the India-Canada CEO Forum

March 02nd, 02:30 pm

In his address at the India-Canada CEO Forum, PM Modi highlighted the emerging ties between the two countries as they steadily progress toward taking bilateral trade to 50 billion dollars. He put forward a few suggestions regarding Clean Energy, Infrastructure & Capital Partnership, AI, Manufacturing & Technology, and Food Processing. He noted that the partnership must expand beyond national capitals to states and provinces.

மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 01st, 03:30 pm

புனிதமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. நான்காயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை சிறப்பாக மாற்றும். பொருளாதாரத்தை மேம்படுத்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். விவசாயிகள் சந்தைகளை அடைய சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயண அனுபவம் ஏற்படும். வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து கிடைக்கும். உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களை மேம்படுத்துவதாகும்.

மதுரையில் ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

March 01st, 03:00 pm

தமிழ்நாட்டின் மதுரையில் இன்று ₹4,400 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புனித நகரமான மதுரையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இது தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயம் என்று கூறினார். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை மாற்றி அமைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் கூறினார். மாநிலத்தில் உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது மக்களை மேம்படுத்துவதாகும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த மேம்பாடுகள் விவசாயிகள், சந்தைகளை அடைய சிறந்த சாலைகள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயணம், வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து ஆகியவற்றை வழங்கும் என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

Cabinet approves the widening of National Highway-167 in Telangana worth Rs.3175.08 crore

February 14th, 01:00 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the widening of National Highway-167 from Gudebellur to Mahabubnagar on the Hyderabad-Panaji Economic Corridor to 4-lane standards in Telangana, worth Rs. 3175.08 crore. It will provide seamless connectivity to key economic, social and logistics nodes across Telangana and provide employment opportunities.

The new Safran facility will help establish India as a global MRO hub: PM Modi during the inauguration of SAESI in Hyderabad, Telangana

November 26th, 10:10 am

During the inauguration of the Safran Aircraft Engine Services India facility in Hyderabad, PM Modi remarked that the new establishment will strengthen India’s emergence as a global MRO hub. Highlighting the employment opportunities, it will create for the youth of South India, he noted that the facility will give fresh momentum to the entire MRO ecosystem. The PM said that India considers investors as co-creators and stakeholders in the journey towards a developed India.

ஐதராபாதில் உள்ள சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

November 26th, 10:00 am

ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா - சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சஃப்ரான் விமான என்ஜின் சேவைகள் இந்தியா நிறுவனத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று முதல் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை புதிய பாதையில் பயணிக்கிறது. சஃப்ரானின் புதிய நிறுவனம் இந்தியாவை உலகளாவிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் (எம்ஆர்ஓ) மையமாக நிலைநிறுத்த உதவும் என்றார். இந்த எம்ஆர்ஓ மையம் உயர் தொழில்நுட்ப விண்வெளித் துறையில் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் கூறினார். சஃப்ரான் வாரியம் மற்றும் நிர்வாகத்தை நவம்பர் 24 அன்று சந்தித்ததை நினைவு கூர்ந்த அவர், முன்னதாக அவர்களுடனான ஒவ்வொரு கலந்துரையாடலிலும், இந்தியா குறித்த அவர்களின் நம்பிக்கையைத் தாம் கண்டதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவில் சஃப்ரானின் முதலீடு இதே வேகத்தில் தொடரும் என்ற தமது எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தினார். இந்தப் புதிய நிறுவனத்திற்காக சஃப்ரான் குழுவிற்குப் பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா தொழிற்சாலையை நவம்பர் 26 ஆம் தேதி திறந்து வைக்கிறார்

November 25th, 04:16 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி நவம்பர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஜிஎம்ஆர் விண்வெளி மற்றும் தொழில்துறை பூங்கா – சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சாஃப்ரான் விமான எஞ்சின் சர்வீசஸ் இந்தியா (SAESI) தொழிற்சாலையை திறந்து வைப்பார்.

'வந்தே மாதரம்' என்ற பாடலின் உணர்வு இந்தியாவின் அழியாத உணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது: ‘மன் கீ பாத்’தில் (மனதின் குரல்) பிரதமர் மோடி

October 26th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், அக்டோபர் 31 அன்று சர்தார் படேலின் 150வது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சத் பூஜை விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இந்திய நாய் இனங்கள், இந்திய காபி, பழங்குடி சமூகத் தலைவர்கள் மற்றும் சமஸ்கிருத மொழியின் முக்கியத்துவம் போன்ற சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர் தொட்டார். 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா குறித்து பிரதமர் சிறப்புரையாற்றினார்.

GST reforms will accelerate India's growth story: PM Modi

September 21st, 06:09 pm

In his address to the nation, PM Modi announced that from the very first day of Navratri, on 22nd September, the country will implement Next-Generation GST reforms. He noted that this marks the beginning of a ‘GST Bachat Utsav’. Recalling that India had taken its first steps towards GST reform in 2017, the PM emphasized that the reform is a continuous journey. He also urged citizens to proudly reaffirm their commitment to Swadeshi.

பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

September 21st, 05:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சக்தியை வழிபடும் பண்டிகையான நவராத்திரியின் தொடக்கத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே, நாடு தற்சார்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைப்பதாகக் குறிப்பிட்டார். 2025 செப்டம்பர் 22 அன்று சூரிய உதயத்தின்போது, நாடு அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இது இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்த விழா சேமிப்பை அதிகரிக்கும் என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் என்றும் அவர் கூறினார். இந்த சேமிப்புத் திருவிழாவின் நன்மைகள் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் என அனைவரையும் சென்றடையும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த பண்டிகைக் காலத்தில், ஒவ்வொரு வீட்டிலும் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டு இனிமையான சூழல் உருவாகும் என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களுக்காகவும் ஜிஎஸ்டி சேமிப்புத் திருவிழா தொடக்கத்திற்காகவும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் இந்தியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தி, வணிக நடவடிக்கைகளை எளிதாக்கி, முதலீடுகளை மேலும் ஈர்க்கும் என்று அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிக்கான போட்டியில் சமமான பங்களிப்பை வழங்குவதை அது உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

May 18th, 12:00 pm

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.