தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

August 29th, 10:34 am

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம், மன உறுதி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா அய்யன்காளி பிறந்த தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதைச் செலுத்தினார்

August 28th, 01:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி மகாத்மா அய்யன்காளியின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதைச் செலுத்தினார். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், நலவாழ்விற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவரும் சமூக நீதிக்கான மாபெரும் முன்னோடியாகவும் விளங்கிய மகாத்மா அய்யன்காளியை திரு நரேந்திர மோடி நினைவுகூர்ந்தார். விளிம்புநிலை மக்கள் கல்வி வாய்ப்புக்களைப் பெறுவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும், ஏழைகளுக்குச் சேவையாற்றுவது ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

August 20th, 10:41 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை செலுத்தினார்

August 16th, 11:35 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடமான சதைவ் அடலில் அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் முன்னேற்றத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்பு இணையற்றது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

August 16th, 09:02 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.08.2026), முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி, அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார். அபாரமான தொலைநோக்குப் பார்வையுடன் தமது வாழ்நாளை நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவர் வாஜ்பாய் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

August 15th, 10:12 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, தேசத்தந்தையின் தொலைநோக்குப் பார்வையிலிருந்தும், பணிகளிலிருந்தும் நாடு எப்போதும் உத்வேகம் பெறும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

August 09th, 10:32 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் அனைவரையும் நினைவுகூர்ந்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் துணிச்சலுக்கும் உறுதிக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் தலைமையால் உத்வேகம் பெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அறைகூவல், சுதந்திரப் போராட்டத்திற்குப் புதிய ஆற்றலை ஊட்டியதுடன், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான இந்திய மக்களின் அசைக்க முடியாத உறுதியையும் பிரதிபலித்தது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

July 19th, 10:55 am

மாபெரும் புரட்சியாளர் மங்கள் பாண்டே பிறந்தநாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். அவரது துணிச்சலான வாழ்க்கை இன்றும் ஒவ்வொரு இந்தியரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறது என்றும், அவரது வீர காவியம் தேசத்தின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.

கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

July 15th, 12:20 pm

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், நாட்டைக் கட்டமைக்க தமது வாழ்வை அர்ப்பணித்து சிறந்த பொது ஆளுமையாகத் திகழ்ந்தவராகவும் நினைவுகூரப்படும் கர்ம வீரர் கே காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினத்தில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

June 28th, 10:38 am

இன்று (28.06.2026) மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். நமது தேச வரலாற்றின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்கு பி.வி. நரசிம்ம ராவ் நிலையான பங்களிப்புகளை ஆற்றியுள்ளார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

June 26th, 12:50 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, பங்கிம் சந்திர சட்டர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தலைமுறை தலைமுறையாக இந்தியர்களிடையே தேசபக்தியையும் கலாச்சாரப் பெருமித உணர்வையும் தூண்டிய ஒரு மாபெரும் இலக்கிய மேதை என அவரைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

June 26th, 12:46 pm

ராஜரிஷி சத்ரபதி ஷாஹு ஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அவர் தனது வாழ்நாளை நலிவடைந்த, சுரண்டப்பட்ட மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார். அவரது மகத்தான செயல்களும் லட்சியங்களும் தேசத்திற்கு வரும் யுகங்களிலும் தொடர்ந்து வழிகாட்டும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை

June 25th, 10:53 am

இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

May 27th, 08:33 am

முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

Prime Minister pays homage to Adi Shankaracharya

April 21st, 01:09 pm

The Prime Minister, Shri Narendra Modi, paid tributes to one of India’s greatest spiritual luminaries, Adi Shankaracharya, on his Jayanti today. Shri Modi remarked that his profound teachings, thoughts and philosophy of Advaita Vedanta continue to guide innumerable people globally. And his efforts to revitalise spiritual thought and establish spiritual centres across the nation remain a lasting inspiration.May his wisdom continue to illuminate our path and strengthen our commitment to truth, compassion and collective well-being, Shri Modi added.

Prime Minister pays homage to Jagadguru Basaveshwara on Basava Jayanthi

April 20th, 09:43 am

The Prime Minister, Shri Narendra Modi, paid homage to Jagadguru Basaveshwara on the occasion of Basava Jayanthi.

Prime Minister pays homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex

April 14th, 11:33 am

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex earlier today.

Prime Minister pays homage to the martyrs of Jallianwala Bagh

April 13th, 09:39 am

PM Modi paid heartfelt homage to the brave martyrs of the Jallianwala Bagh massacre, stating that their sacrifice stands as a powerful reminder of the indomitable spirit of our people. He also lauded their courage and self-respect in the face of the brutality of foreign rule.

Prime Minister pays homage to Mahatma Phule in Parliament Complex

April 11th, 11:48 am

On the occasion of the birth anniversary of Mahatma Jyotirao Phule, PM Modi paid homage to him. The PM said that Mahatma Phule’s ideals continue to give strength and hope to countless people.

Prime Minister offers respectful homage to Sri Guru Tegh Bahadur Ji on the occasion of Parkash Purab

April 07th, 10:52 am

Prime Minister Shri Narendra Modi today offered his respectful homage to Sri Guru Tegh Bahadur Ji, a towering spiritual great of our civilisation, on the sacred occasion of Parkash Purab.