India and Indonesia are connected not only by our history but also by a shared future: PM Modi at community programme in Jakarta
July 07th, 11:47 pm
Addressing the Indian community in Jakarta, PM Modi thanked the diaspora for their warm welcome and praised their contribution to Indonesia's progress and their role as a living bridge between the two nations. He spoke about India's rapid transformation and called upon the community to contribute towards the shared aspirations of Viksit Bharat 2047 and Indonesia Emas 2045.ஜகார்த்தாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றினார்
July 07th, 05:30 pm
ஜகார்த்தாவில் இந்தியச் சமூகத்தினர் தமக்கு அளித்த வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துகொண்டார். அங்கு கூடியிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மற்றும் அவர்களது இந்தோனேசிய நண்பர்கள், பிரதமருக்கு உற்சாகமான மற்றும் அன்பான வரவேற்பை அளித்தனர். இந்தோனேசிய அதிபர் மாண்புமிகு திரு பிரபோவோ சுபியாண்டோவும் பிரதமருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.இந்தோனேஷிய அதிபரால், அந்நாட்டின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘இந்தோனேஷியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 07th, 03:27 pm
இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியாந்தோவால், ‘இந்தோனேசியக் குடியரசின் பிந்தாங் அதிபூர்ணா’ என்ற கௌரவப் பதக்கம் இன்று பிரதமருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது, இந்தோனேஷியக் குடியரசின் மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமாகும். இந்தியா-இந்தோனேஷியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய தலைமைத்துவத்திற்காகவும் சிறப்பான பங்களிப்பிற்காகவும் பிரதமருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியா மற்றும் இந்தோனேஷிய மக்களுக்கும், இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த நாகரிக உறவுகளுக்கும் பிரதமர் அர்ப்பணித்தார்.பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட மிக உயரிய சிவில் விருது
December 18th, 04:30 pm
பிரதமர் நரேந்திர மோடிக்கு பல நாடுகளால் மிக உயரிய சிவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பிரதமர் மோடியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை அங்கீகரிப்பதன் பிரதிபலிப்பாக இவை இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள நாடுகளுடன் இந்தியாவின் வளர்ந்து வரும் உறவுகளையும் இது பிரதிபலிக்கிறதுதேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் உயரிய சிவில் விருது வழங்கப்பட்டது
March 12th, 03:12 pm
மொரீஷியஸ் குடியரசின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இண்டியன் ஓஷன் விருதினை ஏற்றுக் கொண்டு பிரதமர் ஆற்றிய உரை
March 12th, 03:00 pm
மொரீஷியஸின் மிக உயர்ந்த தேசிய விருது வழங்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கௌரவம் மட்டுமல்ல, இது 140 கோடி இந்தியர்களின் கௌரவம் ஆகும். இந்தியா-மொரீஷியஸ் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார, வரலாற்று ரீதியிலான நல்லுறவுக்கு இந்த விருது மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் இவ்விரு நாடுகளின் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது. உலக அளவில் தென் பகுதியில் உள்ள நாடுகளின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களின் அடையாளமாகவும் இந்த விருது திகழ்கிறது. இந்த விருதை பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து மொரீஷியஸ் நாட்டுக்கு வந்து வசித்து வரும் மூதாதையர்களும், அவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கும் இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். தங்கள் கடின உழைப்பின் மூலம், மொரீஷியஸ் நாட்டின் வளர்ச்சியில் ஒரு பொன்னான அத்தியாயத்தை எழுதி, அதன் பன்முகத்தன்மைக்கு அவர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்த கௌரவத்தை ஒரு பொறுப்பாகவும் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா-மொரீஷியஸ் இடையே நல்லுறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று எங்களது நிலைப்பாட்டை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.மொரீஷியசில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
March 12th, 06:07 am
இன்று மொரீஷியஸ் மண்ணில் உங்களுடன் இருப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.மொரீஷியஸில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
March 11th, 07:30 pm
மொரீஷியஸில் உள்ள டிரையனான் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய சமூகத்தினர் மற்றும் இந்தியாவின் நண்பர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திர ராம்கூலம் உடனிருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்கள், தொழில்முறையாளர்கள், சமூக கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், வணிக தலைவர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர். மொரீஷியஸின் பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்
August 11th, 11:07 am
மிக உயரிய விருதான கிராண்ட் காலர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் திமோர்-லெஸ்டே விருதை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு வழங்கி அங்கீகரித்திருப்பது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.இந்த பெருமைமிகு கவுரவம் இந்தியாவுக்கும் தைமோர் – லெஸ்டேவுக்கும் இடையே ஆழமாக வேரூன்றியுள்ள உறவுகள் மற்றும் பரஸ்பர மரியாதையை எடுத்துக்காட்டுகிறது.ஃபிஜி நாட்டின் மிக உயரிய விருது பெற்ற குடியரசுத்தலைவருக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
August 06th, 05:29 pm
ஃபிஜியின் மிக உயரிய விருதான ‘கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி’a விருது குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு வழங்கப்பட்டுள்ளது.22-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கை
July 09th, 09:54 pm
இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு. விளாடிமிர் புடின் ரஷ்யாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரை பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு வழங்கினார். இந்தியா, ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் முன்னுரிமை பெற்ற பாதுகாப்பு கூட்டாண்மை மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புறவு ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக. இந்த விருது வழங்கப்பட்டது.ரஷ்யாவின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது
July 09th, 08:12 pm
இந்திய - ரஷ்ய உறவுகளை வளர்ப்பதில் சிறப்பான பங்களிப்புக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ரஷ்யாவின் மிக உயர்ந்த தேசிய விருதான புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்தலரின் ஆணை விருதை, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடின் வழங்கினார். 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த விருது, கிரெம்ளினில் உள்ள புனித ஆண்ட்ரூ ஹாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.பிரதமருக்கு ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது
July 13th, 11:56 pm
கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜன் ஆஃப் ஹானர் என்ற ஃபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு இமானுவேல் மெக்ரான் வழங்கினார்.PM honoured with Bhutan’s highest civilian award
December 17th, 08:42 pm
The King of Bhutan, His Majesty Jigme Khesar Namgyel Wangchuck, conferred its highest civilian award, the Order of the Druk Gyalpo, on Prime Minister, Shri Narendra Modi on the occasion of the country’s National Day. Shri Modi has expressed his gratitude to His Majesty the King of Bhutan for this warm gesture.