குஜராத் மாநிலம், ஹஜிராவில் நடைபெற்ற கண்காட்சியில், பிரதமர் பங்கேற்பு
June 05th, 10:08 pm
குஜராத் மாநிலம் ஹஜிராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05-06-2026) கலந்து கொண்டார். பாதுகாப்புத் துறையில், 'மேக் இன் இந்தியா' (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்) என்ற முன்முயற்சியின் கீழ், அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை அவர் பார்வையிட்டார்.குஜராத்தின் ஹசீராவில் உள்ள எல்&டி வளாகத்தை பிரதமர் பார்வையிட்டார்
June 05th, 08:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் ஹசீராவில் உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) வளாகத்தை பார்வையிட்டார். அப்போது பல்வேறு துறைகளிலும் அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் கண்டுபிடிப்பு சார்ந்த நடவடிக்கைகளை அவர் நேரில் பார்வையிட்டார்.From waste to wealth: PM Modi showcases Surat’s green development model
June 05th, 04:30 pm
At the launch of development projects in Surat, Gujarat, PM Modi called upon all elected representatives of local bodies to work even harder for the state's progress. Expressing pride in Surat being one of the cleanest cities in the country, he lauded the continuous efforts of all stakeholders. He credited Gujarat for its significant contribution to India's energy self-reliance, noting that the state produces one-fifth (50 GW) of the nation's 250 GW renewable energy capacity.குஜராத்தின் சூரத் நகரில் ரூ. 18,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
June 05th, 04:16 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஜூன் 05, 2026) குஜராத்தின் சூரத் நகரில் 18,800 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல உட்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாலை, மின்சாரம், தொழிற்துறை சார்ந்த இந்த திட்டங்கள் அந்தப் பிராந்திய வளர்ச்சியை துரிதப்படுத்துவதுடன் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும் எனப் பிரதமர் குறிப்பிட்டார்.PM to visit Surat and Daman on 5th June
June 04th, 10:03 am
PM Modi will visit Gujarat and Daman on 5th June, 2026. He will visit Hazira in Surat district to review ongoing industrial operations and infrastructure projects. Later, he will launch projects worth around ₹18,800 crore in Surat. In Daman, he will inaugurate the New Terminal Building of NAMO Airport and NAMO Hospital and also launch projects worth around ₹2,970 crores. He will also lay the foundation stone for projects in Lakshadweep worth around ₹885 crore.இரண்டாவது கட்ட அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் பூமி பூஜை செய்தார்
January 18th, 10:30 am
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாவது கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூஜையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக நடத்தினார். இந்நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர், மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர்.அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்ட 2-ம் கட்டப் பணிகள், சூரத் மெட்ரோ திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
January 18th, 10:30 am
உத்தராயன் தொடக்க தினமான இன்று, அகமதாபாத், சூரத் நகரங்களுக்கு மிக முக்கியப் பரிசு கிடைத்துள்ளது. நாட்டின் இரு பெரும் வர்த்தக மையங்களான அகமதாபாத் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டங்கள், இவ்விரு நகரங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். கெவாடியாவிற்கு, நேற்று புதிய ரயில் பாதைகள் மற்றும் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, அகமதாபாதிலிருந்து கெவாடியாவிற்கு, அதிநவீன ஜன்-சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதை முன்னிட்டு, குஜராத் மக்களைப் பாராட்டுவதோடு, எனது நல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.ஹாஜிராவில் ரோ-பாக்ஸ் முனைய தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
November 08th, 10:51 am
ஒரு திட்டத்தைத் தொடங்குவதால், தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலை எப்படி மேம்படும் என்பதற்கும், வாழ்க்கையின் வசதி எவ்வாறு உயரும் என்பதற்கும் இது உதாரணமாக உள்ளது. புனித யாத்திரை, நேரம் மிச்சமாகுதல், விவசாய உற்பத்தி இழப்பு குறைதல், சூரத் சந்தைக்கு காய்கறிகள், கனிகளை கொண்டு செல்லுதல் ஆகிய பயன்கள் இதன் மூலம் கிடைக்கும். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் என எல்லோருக்கும் இதனால் பயன் கிடைக்கும்.ஹசீராவில், ரோ-பாக்ஸ் முனையத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்
November 08th, 10:50 am
குஜராத்தின், ரோ–பாக்ஸ் முனையத்தை காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஹசீரா மற்றும் கோகா இடையேயான ரோ–பாக்ஸ் படகுப் போக்குவரத்தையும் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். உள்ளூர் பயன்பாட்டாளர்களிடமும் அவர் கலந்துரையாடினார். கப்பல்துறையின் பெயரும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித் துறை என மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.வரும் நவம்பர் எட்டாம் தேதியன்று ஹசிராவில் ரோ-பாக்ஸ் முனையத்தை திறந்து வைத்து, ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே ரோ-பாக்ஸ் படகு சேவையையும் துவக்கி வைக்கிறார் பிரதமர்
November 06th, 03:41 pm
100 மீட்டர்கள் நீளம் மற்றும் 100 மீட்டர்கள் அகலத்தோடு ரோ-பாக்ஸ் முனையம் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இதற்கான செலவு சுமார் ரூ 25 கோடியாகும். நிர்வாக அலுவலகக் கட்டிடம், வாகனங்களை நிறுத்துமிடம், துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2019-ல்’ பங்கேற்க பிரதமர் நாளை குஜராத் பயணம்
January 16th, 08:03 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தமது 3 நாள் பயணத்தை நாளை (17.01.2019) தொடங்குகிறார். இப்பயணத்தின் போது அவர் காந்திநகர், அகமதாபாத், ஹாசிரா ஆகிய இடங்களுக்குச் செல்கிறார்.