The whole country is proud of you and watching you with admiration: PM Modi says to Women’s World Cup Champions
November 06th, 10:15 am
During his interaction with Women’s World Cup 2025 champions, PM Modi said they had truly accomplished something remarkable. The PM acknowledged the recurring challenges they faced and praised their courage and ability to instill confidence in others despite adversity. He encouraged them to advocate for Fit India and expressed his joy at having had the opportunity to interact with them.ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ஐ வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் உரையாடினார்
November 06th, 10:00 am
புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ல் கோப்பையை வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று உரையாடினார். 2025 நவம்பர் 02 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நாள் தேவ் தீபாவளி, குர்புரப் ஆகியவற்றை குறிப்பிடும் மிக மகத்துவமான நாள் என்று பிரதமர் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அணி பயிற்சியாளர் திரு அமோல் மஜூம்தார் அவரை சந்தித்தது கௌரவமிக்கது என்று கூறினார்.மனதின் குரல், டிசம்பர் 2023
December 31st, 11:30 am
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரல் என்பது உங்களோடு கலந்துறவாடும் ஒரு சுபமான சந்தர்ப்பம். குடும்பச் சொந்தங்களோடு இணையும் போது, அது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கிறது, இனிமை தருவதாக அமைகிறது. மனதின் குரல் வாயிலாக, உங்களோடு கலந்து பேசும் போது என் உணர்வு இப்படித் தான் இருக்கிறது, மேலும் இன்றோ, தொடரும் நமது பயணத்தின் 108ஆவது பகுதியாக இருக்கிறது. நம் நாட்டிலே 108 என்ற எண்ணுக்கு மிகப் பெரிய மகத்துவம் உண்டு, அதன் புனிதத்துவம் என்பது ஆழமான ஆய்வுக்கான விஷயம். மாலையில் 108 முத்துமணிகள், 108 முறை ஜபித்தல், 108 திவ்யதேசங்கள், கோயில்களில் 108 படிகள், 108 மணிகள், 108 என்ற இந்த எண் மிக ஆழமாக நம்பிக்கையோடு இணைந்திருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 108ஆவது பகுதி என்னைப் பொறுத்த மட்டிலே, மிகவும் சிறப்பானதாக ஆகி விட்டது. இந்த 108 பகுதிகளிலும் நாம் மக்களின் பங்களிப்புக்கான எத்தனையோ எடுத்துக்காட்டுகளைப் பார்த்திருக்கிறோம், அவற்றிலிருந்து கருத்தூக்கம் பெற்றிருக்கிறோம். இப்போது இந்தக் கட்டத்தை எட்டிய பிறகு, நாம் புதிய வகையில், புதிய சக்தியோடு, விரைவோடு முன்னேற உறுதிப்பாடு மேற்கொள்ள வேண்டும். நாளைய சூரியோதயம் 2024ஆம் ஆண்டிற்கான முதல் சூரியோதயமாக இருக்கும் என்பது எத்தனை இயல்பாக அமைந்த ஒன்று!! அப்போது நாம் 2024இலே கால் பதித்திருப்போம். உங்கள் அனைவருக்கும் 2024ஆம் ஆண்டிற்கான பலப்பல நல்வாழ்த்துக்கள்.